மைனா நந்தினியின் கணவருக்கு என்னாச்சு? கையில் இவ்ளோ பெரிய கட்டு போட்டு இருக்காரே..பதறிய ரசிகர்கள்!
சென்னை : கையில் கட்டுடன் மைனா நந்தினியின் கணவரின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பதறிப்போய் என்னாச்சு என கேட்டு வருகின்றனர்.
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி படத்தில் சூரியின் மனைவியாக ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார் மைனா.
இதையடுத்து சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்கிற காமெடி ரோலில் நடித்தார். இந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுதந்ததோடு மைனா என்பது இவரின் அடையாளமாகவே மாறிவிட்டது.

படங்களில் பிஸி
தற்போது விஜய் டிவியின் ஆஸ்தான முகங்களில் ஒருவராக வலம் வரும் மைனா நந்தினி, தற்போது திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் இவரும் ஒருவராக நடித்திருந்தார். இதுதவிர மற்ற சில படங்களிலும், விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

காதல் திருமணம்
மைனா ஜீ தமிழி சத்யா சீரியல் மூலம் பிரபலமான யோகேஷ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் விஜய் டிவியில் வைதேகி காத்திருந்தாள் எனும் சீரியலிலும் நடித்துள்ளார். நந்தினி-யோகி தம்பதிக்கு துருவன் எனும் ஒரு வயது மகன் இருக்கிறார். இவர்கள் இருவரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தினார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்
மைனா நந்தினி தற்போது பிக் பாஸ் சீசன் 6ல் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்து ஆர்வமாக விளையாடி வருகிறார். பிக் பாஸ் சீசன் 6 தற்போது 44 நாட்களை எட்டியுள்ள நிலையில், மைனா நந்தினி இரண்டாவது முறையாக கேப்டனாகி உள்ளார். இவரது பெயர் நாமினேஷனில் வந்தாலும், ரசிகர்களை வாக்குகளை அளித்து இவரை காப்பாற்றி விடுகின்றனர்.

பதறிய ரசிகர்கள்
இந்நிலையில், மைனா நந்தினியின் கணவர் கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்திருந்தார். இதில், தோளில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக என்னால் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள முடியவில்லை என வருத்தத்தோடு பதிவிட்டுள்ளார். என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருந்தீர்கள் அதற்கு நன்றி. ஆனால், இந்த நேரத்தில் என் உடலையும், குடும்பத்தையும் கவனித்துக்கொள்வது என் கடமை என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் யோகேஷுக்கு ஆறுதல் கூறி வருவதோடு, மைனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது இவருக்கு இப்படி ஒரு நிலைமையா என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











