யாஷிகாவுடன் பிரேக் அப்… இதுதான் காரணம்… மனம் திறந்த நிரூப் !

சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அறிமுகம் இல்லாதவராக இருந்தாலும் இறுதியில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நிரூப்.

நீண்ட தலைமுடியுடன் 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சுற்றிவந்த நிரூப், கடைசியில் தலைமுடியை வெட்டி சும்மா ஜம்முனு ஹீரோ போல மாறி ஏகப்பட்ட ரசிகைகளின் மனதில் இடம் பிடித்தார்.

பிக் பாஸ் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துள்ள நிலையில், பேட்டி அளித்துள்ள நிரூப், யாஷிகா குறித்து மனம் திறந்து பல சுவாரசியத் தகவல்களை கூறியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில், யாஷிகாவின் முன்னாள் காதலரான நிரூப் கலந்து கொண்டார். மற்ற சீசன்களைப் போல் இல்லாமல் இந்த சீசனில் பல புது முகங்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். ஆரம்பத்தில் சுவாரசியம் இல்லாமல் இருந்த இந்த நிகழ்ச்சியில், நாட்கள் செல்ல செல்ல சுவாரசியம் கூடியது.

நிரூப்

நிரூப்

இந்த நிகழ்ச்சியில் நீண்ட தலைமுடியுடன் வாட்டசாட்டமாக இருந்த நிரூப், அவ்வப்போது பிரியங்காவிடம் சண்டைப்போட்டுக்கொண்டு சர்ச்சையில் சிக்கினார். இதனால், இணையத்தில் அவருக்கு எதிராக பல கருத்துக்கள் பரவின. ஆனால், இறுதிவாரத்தில் மக்களின் மனதில் இடம் பிடித்து டாப் 5 இடத்தைப் பிடித்தார்.

செட்டாகவில்லை

செட்டாகவில்லை

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்துள்ள நிலையில் பேட்டி அளித்துள்ள நிரூப், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள முக்கிய காரணம் யாஷிகா தான், அவரால் தான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்றார். நானும் யாஷிகாவும் காதலித்தது உண்மைதான். ஆனால், எங்களுக்குள் செட்டாகவில்லை, அதனால் நாங்கள் இருவரும் ஒன்றாக பேசி பிரிந்துவிட்டோம். இப்போது இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் யாஷிகாவிடம் பேசினேன் என்றார்.

Recommended Video

Yashika சொன்னதை செய்து காட்டிய NIROOP! | Bigg Boss 5 Tamil, Niroop changeover
மீண்டும் சேர்ந்தால்

மீண்டும் சேர்ந்தால்

யாஷிகாவும் நிரூப்பும் உண்மையில் நல்ல காதலர்களாகத்தான் இருந்து இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் பிரேக் அப் ஆகிவிட்டது பிரிந்துவிட்டோம் என்று சொன்னாலும் மனதிற்குள் அன்புடனே இருக்கிறார்கள் .பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதையில் கூட நிரூப் யாஷிகாவை மறக்காமல் அவளால் தான் இங்கு வந்தேன் என்றார். அதேபோல,விபத்திலிருந்து தேறிய யாஷிகாவும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து நிரூப்பை சந்தித்து பேசினார். அப்போது, யாஷிகாவை பார்த்த நிரூப் துள்ளிகுதித்து ஓடிவந்ததை யாராலும் மறக்கவே முடியாது. எது எப்படியோ மீண்டும் இருவரும் சேர்ந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X