பிக் பாஸ் நிவாஷினி நடித்துள்ள பான் இந்தியா படம்.. கிருஷ்ணாவதாரம் ரிலீஸ் எப்போ தெரியுமா?

விஜய் டிவி பிக் பாஸ் பிரபலமான நிவாஷினி கிருஷ்ணன், மே 7 அன்று வெளியாகவுள்ள 'கிருஷ்ணாவதாரம் பாகம் 1' திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். பிக் பாஸ் தமிழ் நடிகைகள் ஆள் அட்ரஸே காணாமல் போய் வரும் நிலையில், பாலிவுட்டுக்கு சென்றுள்ளார் நிவாஷினி. இந்தப் புராணத் திரைப்படத்தில், அவர் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஜோடியாக ருக்மிணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரியேட்டிவ் லாண்ட் ஸ்டூடியோஸ் மற்றும் அதாஸ்ரீகதா மோஷன் பிக்சர்ஸ் இணைந்து இதைத் தயாரிக்க, ஹர்திக் குஜ்ஜர் இயக்கியுள்ளார்.

பரமக்குடியைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், நிவாஷினி சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர். லண்டன் கோல்ட்ஸ்மித்ஸ் பல்கலைக்கழகத்தில் ஃபேஷன் மீடியா பயின்ற இவர், பல தொலைக்காட்சித் தொடர்கள் வழியாக ரசிகர்களைக் கவர்ந்தார். பின்னர், விஷ்ணு விஷாலின் 'ஓஹோ எந்தன் பேபி' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

Bigg Boss Nivashini Krishnan starring Krishnavataram release date announced

2022 இல் விஜய் டிவியின் 'பிக் பாஸ் சீசன் 6' இல் பங்கேற்ற நிவாஷினி, அந்த சீசனின் இளம் வயது மற்றும் சிங்கப்பூரின் முதல் போட்டியாளராகப் பிரபலமானார். சமூக வலைத்தளங்களில் இவரது புகைப்படங்களை லட்சக்கணக்கானோர் தொடர்கின்றனர்.

'கிருஷ்ணாவதாரம்' நிவாஷினியை பான்-இந்தியா ஸ்டாராக நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது, இது அவரது திரை வாழ்வில் ஒரு முக்கிய மைல் கல்.

இப்படத்தின் மூலம் அவர் தென்னிந்தியாவின் முக்கியமான நடிகையாக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரம்மாண்டமான இந்தப் படைப்பில் ருக்மிணி வேடத்திற்கு உயிர் கொடுக்கும் நிவாஷினி கிருஷ்ணன் மீது அனைவரின் பார்வையும் பதிந்துள்ளது.

'கிருஷ்ணாவதாரம்' மட்டுமல்லாமல், நிவாஷினி நடித்துள்ள மற்றொரு தெலுங்குத் திரைப்ப்டமான 'பூமராங்' குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்தப் படம் 2026 டிசம்பர் மாதத்தில் திரைக்கு வரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் மே 7ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X