For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆரஞ்சு பழத்தை வச்சு கண்ணுல அடிச்சிட்டாங்க.. கடுப்பான ஆரி.. கண்டுக்காம அவுட்டாக்கிய பிக் பாஸ்!

  |

  சென்னை: ரம்யா பாண்டியனின் ராஜ தந்திரமான யோசனையை கேட்டு அரக்கர்கள் கூட்டம் நடிகர் ஆரியின் மூக்கில் ஆரஞ்சு பழத்தை ஸ்ப்ரே பண்ணிட்டாங்க, உடனே டென்ஷனான ஆரி, பிக் பாஸிடம் புகாரளித்தும் அதற்கான பலன் கிடைக்கவில்லை.

  Bigg Boss Tamil Season 4 | Promo 1• Day 17

  மனசு ஹர்ட் பண்ற மாதிரி தனி நபர் தாக்குதல் செய்யக் கூடாது என சனம் ஷெட்டியும் ரம்யா பாண்டியனின் அந்த யோசனைக்கு சம்மதித்தார்.

  ஆனால், பாலாஜி மட்டுமே இதெல்லாம் தப்பு இல்லையா பிசிக்கல் டச் கிடையாதா என்று கேட்டார்.

  சேலையை பிடிச்சு இழுத்த வேல்முருகன்.. நிஷாவும் உடந்தை.. பிக் பாஸிடம் போட்டுக் கொடுத்த அர்ச்சனா!

  ரம்யாவுக்கு லவ் யூ சொன்ன ரியோ

  ரம்யாவுக்கு லவ் யூ சொன்ன ரியோ

  அலர்ஜி வருவது போல ஏதாவது வாசனை வர பொருள் இருந்தா அதை வச்சி அவங்கள அவுட் பண்ணலாம் என மறுபடியும் ஐடியா கிடைத்த ரம்யாவை பார்த்து ரியோ ராஜ் ஐ லவ் யூ என்றார். ஏற்கனவே ரம்யாவை தூக்கி கொஞ்சியதிலேயே ரியோவின் மனைவிக்கு டென்ஷன் ஆகி இருக்கும், இப்போ இந்த ஐ லவ் யூ வேற.. கிரைம் ரேட் கூடிக் கொண்டே போகுது.

  ஆரிக்கு அர்ச்சனா அட்வைஸ்

  ஆரிக்கு அர்ச்சனா அட்வைஸ்

  அடுத்ததாக அரக்கர்களிடம் செல்லும் ஆரிக்கு அர்ச்சனா ஏகப்பட்ட அட்வைஸ்களை வாரி வழங்கினார். எல்லாருக்கும் அட்வைஸ் சொல்லிட்டு இருந்த ஆரிக்கே இப்போ அர்ச்சனா அட்வைஸ் சொன்னதை பார்த்த ரசிகர்களுக்கு ரொம்பவே ஹேப்பியாத் தான் இருந்திருக்கும்.

  காதில் இடித்த பாலாஜி

  காதில் இடித்த பாலாஜி

  ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே கத்துவது போல கிட்ட வந்த பாலாஜி முருகதாஸ், ஆரியின் காதில் இடித்து விட்டார். பின்னர், தொடர்ந்து அசையாமல் நின்று கொண்டிருந்த ஆரியை அரக்கர் கூட்டம் ஏகப்பட்ட டார்ச்சர்களை செய்தும், கிண்டல் செய்தும் அசைய வைக்க முயற்சித்தது.

  ஆரஞ்சு பழம் அடித்த ரியோ

  ஆரஞ்சு பழம் அடித்த ரியோ

  ஆரஞ்சு பழத்தின் சாற்றை ஆரியின் கண்களிலேயே சட்டென்று ரியோ ராஜ் அடித்து விட்டார். உடனே டென்ஷனான ஆரி, அங்கே இருந்து நகர்ந்து பிக் பாஸிடம் புகார் கூறத் தொடங்கினார். மேலும், கண்ணுல எலுமிச்சை பழச்சாறு அடிச்சா எப்படி நகராம இருக்கிறது. பாலாஜி அப்பவே காதுல அடிச்சான் என எகிறினார் ஆரி.

  ஆரியை முறைச்ச பாலாஜி

  ஆரியை முறைச்ச பாலாஜி

  விளையாட்டுனா ஒழுங்கா விளையாடுங்க, நீங்க ஆடுறதுக்கு பேரு கேமை கிடையாது என ஆரி அர்ஜுனா வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்து விட்டார். மேலும், பாலாஜியை நேர்மையற்றவன் என போறா போக்கில் சொன்னதை கேட்டு கொந்தளித்த பாலாஜி, ஆரியிடம் நேருக்கு நேர் மல்லுக்கு நின்று முறைத்தது தரமான சம்பவம்.

  ஏமாற்றிய பிக் பாஸ்

  ஏமாற்றிய பிக் பாஸ்

  ஆரியின் காதில் கை பட்டது என்று பாலாஜியும், கண்ணில் ஆரஞ்சு சாறு பட்டது என ரியோவும் தவறை ஒப்புக் கொண்ட பின்னரும், கேமை சுவாரஸ்யமாக மாற்ற நினைத்த பிக் பாஸ், ஆரிக்கு நியாயம் வழங்காமல், அவர் தோற்றதாக அறிவித்து, ஹாஃப் செய்து விட்டார்.

  அரக்கனாக மாட்டேன்

  அரக்கனாக மாட்டேன்

  ஆரியை அரக்கனாக மாற்ற நினைத்த அரக்கர்கள், ஸ்பிரேவை கொடுத்து, இதை நீங்க தான் அடிக்கணும் என சொன்னவுடன், நீங்க எதை வேண்டுமானால் பண்ணிக் கோங்க நான் அப்படியெல்லாம் கேவலமா விளையாட மாட்டேன் என பகிரங்கமாக மறுத்தார். இந்த கேமில், ஆரிக்கு அப்படி கோபம் வந்தாலும், விளையாட்டில் இருக்கிறோமே என அனைத்தையும் அடக்கிக் கொண்டு அமைதியானார்.

  English summary
  After asuras team sprayed orange juice in Aari’s face he got tensed and gave a complaint to Bigg Boss. But Aari not got a judiciary and out in this task.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X