இப்போதான் முழிச்சீங்களா பிக் பாஸ்.. எல்லாரும் தமிழில் தான் பேசணும்.. தலைவிக்கு ஆரம்பித்தது தலைவலி!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆகி விட்டது.
இப்போதான் பிக் பாஸ் தூங்கி எழுந்தார் போல, சம்யுக்தா மற்றும் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு தமிழில் பேச வேண்டும் என்ற கட்டளையை போட்டுள்ளார்.
அதுக்கு சம்யுக்தா பண்ண அலம்பல்களை மூன்றாவது புரமோவாக வெளியிட்டுள்ளனர்.

காதல் டிராக்காம்
இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் டிராக்கில் மன்மதராசா பாடல்களை ஹவுஸ்மேட்ஸ் பாடிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம், பாலா படுத்துக் கொண்டு, ஷிவானியுடன் ரொமான்ஸ் செய்வதை போட்டு ரசிகர்களை ரொம்பவே வெறுப்பேற்றி விட்டார் பிக் பாஸ் எடிட்டர்.

ரேடியோ ஸ்டேஷன்
ஏகப்பட்ட ஆர்.ஜே.க்களும், சூப்பர் சிங்கர்களுமாக இந்த சீசன் பிக் பாஸ் களைகட்டுவதால், இன்றைக்கு பிக் பாஸ் வீடு ரேடியோ ஸ்டேஷனாக மாறப் போகிறது. நீதிமன்ற டாஸ்க்கில் டுபாக்கூர் ஜட்ஜாக செயல்பட்ட சுச்சி, இன்னைக்கு நல்லா பர்ஃபார்ம் பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கலாம்.

உனக்கு எலிமினேஷன் இருக்கு
இரண்டாவது புரமோவில் இன்னைக்கு ஃபன் இருக்கு என ஓவராக கூச்சல் போடும் சோமசேகரை பார்த்து, நெட்டிசன்கள், இந்த வாரம் உனக்கு எலிமினேஷன் இருக்கு என மறுபடியும் அடித்து சொல்றாங்க, பாவம்பா அவரு நல்லா கேம் விளையாடினாலும், அவரை வீட்டை விட்டு வெளியேற்ற பிக் பாஸும் ரசிகர்களும் சேர்ந்தே முடிவு கட்டிட்டாங்க போல!

தமிழில் தான் பேச வேண்டும்
இந்த வாரம் சோமசேகரை ஏமாற்றி விட்டு பாலாவுடன் கூட்டணி வைத்து ஐஏஎஸ் படிக்காமலே பிக் பாஸ் வீட்டுக்கு தலைவரான சண்டைக்கோழி சம்யுக்தாவை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்த பிக் பாஸ், இந்த வீட்டில் யாரும் ஆங்கிலத்தில் பேசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என திருடன் கையிலேயே சாவி கொடுப்பது போல கொடுக்கிறார்.

சம்யுக்தாவின் அலம்பல்
இந்த வீட்ல தமிழ்ல மட்டும்தான் பேசணும்னு ஒரு முக்கியமான விதிமுறை இருக்கு என்றதும், முந்திரிக்கொட்டை சம்யுக்தா, "Sure Bigg Boss, I'll take Care" என பிக் பாஸிடமே தனது அலம்பலை ஆரம்பிக்கும் காட்சிகளை மூன்றாவது புரமோவாக தற்போது வெளியிட்டு வைரலாக்கி உள்ளனர்.

சுச்சி, மீ அண்ட் அர்ச்சனா
ஐ திங்க், இது, சுச்சி, மீ அண்ட் அர்ச்சனா என்று வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலம் கலந்தே சம்யுக்தா பேசும் காட்சிகளாகவே புரமோ வீடியோ முழுவதும் நிறைந்து இருக்கிறது. முக்கால் தூக்கத்தில் இருக்கும் ஆஜீத், பாலாஜி எல்லாம் தமிழ் புலவர்கள் என நினைத்துக் கொண்டு சம்யுக்தா விளக்கம் கேட்பது செம காமெடி.

ஓகே ஓகேன்னு ரொம்ப சொல்ற
சம்யுக்தா தமிழில் தான் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களும் பேச வேண்டும் எனக் கூறும் போது, ஓகே சொல்லும் பாலாஜியை கண்டிக்கும் விதமாக ஓகே ஓகேன்னு ரொம்ப சொல்ற என்றுக் கூறி, மைனஸ் ஒன் என மார்க் போடும் சம்யுக்தாவை பார்த்து, மைனஸ் ஒன் என்பது தமிழா? என பாலாஜி நக்கல் அடிப்பதும் புரமோவை வைரலாக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications











