Bigg Boss OTT: மருத்துவ முத்தம்லாம் என்னங்க.. பிக் பாஸ் ஓடிடில.. லிப் கிஸ்ஸே அடிக்கிறாங்க!
மும்பை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா மற்றும் ஆரவ் முதல் சீசனிலேயே முத்தம் கொடுத்துக் கொண்ட நிலையில், அது மருத்துவ முத்தம் என அப்படியே பிளேட்டை திருப்பி இருந்தனர்.
கடந்த சீசனில் அதன் விளைவாக அசல் கோலார் பெண் போட்டியாளர்களுடன் வேறலெவலில் எல்லை மீறிய காட்சிகளும் இடம்பெற்று ரசிகர்களை கடுப்பாக்கின.

இங்கேயே இப்படி என்றால் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை சொல்லவா வேண்டும். சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் ஓடிடி சீசன் 2வில் நடிகை ஆகான்ஷா புரிக்கு சக போட்டியாளரான ஜத் ஹாதித் கேமராக்கள் சூழ இருக்கும் அந்த வீட்டில் வெட்ட வெளிச்சமாக லிப் லாக் அடித்த காட்சிகள் இணையத்தில் ஏகப்பட்ட விவாதங்களை கிளப்பி உள்ளன.
எல்லை மீறும் பிக் பாஸ்: டிஆர்பியை ஏற்றுவதற்காக ஒவ்வொரு சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களையும் சர்ச்சைகளையும் சில ஆபாசங்களையும் கிளப்பி அந்த நிகழ்ச்சியை மக்கள் மத்தியில் ஓட வைத்து பலமாக காசு பார்த்து வருகின்றனர்.
சல்மான் கான் நடிக்கும் படங்களுக்கே வழங்கப்படாத பெரிய சம்பளம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மட்டும் அவருக்கு கொடுக்கப்பட்டு வருவதற்கு காரணமே அதுதான் என்கின்றனர்.

ஆகான்ஷாபுரிக்கு லிப் லாக்: தமிழில் வெளியான கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் திவ்யா கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் தான் இந்த ஆகான்ஷாபுரி. கடைசியாக விஷால், தமன்னா நடித்த ஆக்ஷன் படத்திலும் இவர் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
பாலிவுட்டில் வெளியான காலண்டர் கேர்ள்ஸ் படத்தில் மட்டுமே நடித்த இவர், நீண்ட காலமாக சினிமாவில் சாதிக்க போராடி வந்தாலும், வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த நிலையில், பிக் பாஸ் ஓடிடி சீசன் 2வை நம்பி உள்ளே வந்திருக்கிறார். இந்நிலையில், அவருக்குத்தான் சமீபத்தில் சக போட்டியாளர் லிப் லாக் முத்தம் கொடுத்துள்ளார்.
லவ் ஜிகாத் சர்ச்சை: இந்து பெண்களை குறிவைத்து இஸ்லாமிய இளைஞர்கள் காதல் வலையில் விழ வைக்கின்றனர் என்கிற குற்றச்சாட்டை சமீபத்தில் தி கேரளா ஸ்டோரி உள்பட பல படங்கள் எடுத்துக் காட்டி வரும் நிலையில், இஸ்லாமிய இளைஞரான ஜத் ஹதித் இந்து பெண்ணான ஆகான்ஷாபுரியை வலுக்கட்டாயமாக வலி மறித்து பின்னர், அவருக்கு லிப் லாக் கொடுக்க இருவரும் லிப் லாக் முத்தத்தை அடுத்த கணமே பகிர்ந்து கொள்கின்றனர் என நெட்டிசனக்ள் லவ் ஜிகாத் சர்ச்சையையும் கிளப்பி உள்ளனர்.
சல்மான் கான் தான் இப்படிப்பட்ட வேலைகளை செய்ய ஆதரித்து வருகிறார். அவர் மட்டும் ஸ்க்ரீனில் நோ கிஸ் பாலிசி என்கிற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார் என்று சல்மான் கானையும் வச்சு செய்து வருகின்றனர்.

அடுத்து என்ன: லிப் லாக் வரை வெளிப்படையாக பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே காட்டி விட்ட நிலையில்; அடுத்த என்ன இரவு நேரத்தில் ஒரே கட்டிலில் இருவரும் இருப்பதைத் தானே காட்டப் போகின்றீர் என்றும் நெட்டிசன்கள் பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியை வறுத்தெடுத்து வருகின்றனர்.
மேலும், இதே சீன் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் விரைவில் வரும் என இது முற்றிலும் ஸ்க்ரிப்டட் தான் என்றும் இளைஞர்கள் மனங்களில் விஷ விதையை விதைத்து வருகின்றனர் என்றும் ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிகின்றன.


Click it and Unblock the Notifications











