இளைஞரின் அழகை பார்த்து மார்க் போட்ட பிக்பாஸ் பிரபலம்… நொந்துபோன ஆடியன்ஸ்!

சென்னை: சின்னத்திரையில் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்ட ஓவியா, இளைஞரின் அழகை பார்த்து மார்க் போட்டதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஓவியா. அழகும், திறமையும் இருந்த போதும், சரியான பட வாய்ப்புகள் அமையாததால் தற்போது வரை நல்ல படவாய்ப்பைத் தேடி அலைந்து வருகிறார்.

Bigg Boss Oviya was impressed by the young man at the dance show

பிக் பாஸ் நிகழ்ச்சி: நடிகை ஓவியா என்றதும் நம் நினைவுக்கு வருவது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில், குட்டி குட்டி டவுசர் போட்டுக்கொண்டு காலையில் போடும் பாட்டுக்கு அசராமல் டான்ஸ் ஆடி இளைஞர்களை குஷிப்படுத்தி வைத்திருந்தார். அது மட்டுமல்லாமல், கேமராவைப் பார்த்து ஸ்ப்ரே அடிச்சிப்புடுவேன் என்று அவர் பேசிய வசனம் இன்று வரை டிரெண்டிங்கில் உள்ளது.

களவாணி படத்தில்: மலையாளத்தில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான கங்காரு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ஓவியா, நாளை நமதே படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். களவாணி படத்தில் விமலுடன் ஜோடி போட்டு நடித்து தமிழ் ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்தார். இப்படம் வசூலை அள்ளியது. அதன்பின் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார்.

படவாய்ப்பு இல்லை: இதையடுத்து பிறகே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் இருந்து இவர் பாதியில் வெளியேறினாலும், இவருக்கு என்று தனி ஆர்மி உருவானது. சினிமாவில் மிகப்பெரிய வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் பின், 90ml , காஞ்சனா 3 படத்தில் நடித்தார். இந்த படங்களும் தோல்விப்படங்களாக அமைந்தன.

அழகைப் பார்த்தேன்: படவாய்ப்பு இல்லாததால் சின்னத்திரையில் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். அப்போது, ஒரு இளைஞர் நடனமாடி முடித்துவிட்டு, ஓவியா போடும் மதிப்பெண்ணுக்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது ஓவியா, நான் உன்னுடைய ஆட்டத்தை பார்க்கவில்லை, உன்னை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். உன் சிக்ஸ் பேக் அழகை பார்த்து ரசித்தேன் என்று அனைவர் முன்னும் கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் கூறியுள்ளார்.

என்னத்தான் ஓவியா அனைத்து விஷயத்தையும் வெளிப்படையாக பேசக்கூடியவராக இருந்தாலும், அனைவர் முன் அந்த இளைஞரிடம் வழிந்ததைப் பார்த்து அங்கிருந்த ஆடியன்ஸ் நொந்துபோனதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்து பல நாட்கள் கழித்து தற்போது வெளியாகி உள்ளது. ஆனால், ஓவியாவின் ரசிகர்களோ இதெல்லாம் ஒரு விஷயமா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X