அமீர் கன்னத்தை கடிக்கும் பாவனி.. செம ரொமான்ட்டிக்காக பர்த்டே விஷ் பண்ண பிக் பாஸ் போட்டியாளர்!

சென்னை: சின்னத்திரை நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான பாவனி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு செம க்யூட்டாகவும் ரொமான்ட்டிக்காகவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை அமீர் கூறியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்ட பாவனியை அபிநவ் சுற்றி சுற்றி வந்தார். ஆனால், திடீரென வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த அமீர் இப்போ நிக்சன் ஐஷுவிடம் செய்யும் சேட்டைகளை போல செய்து பாவனியை மொத்தமாக கவர்ந்து விட்டார்.

Bigg Boss Pavani celebrates her birthday today and Amir sends a superb wish

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கன்டென்ட்டுக்காக பல போட்டியாளர்கள் லவ் டிராக்கை பயன்படுத்தியது போல இவர்களும் பண்றாங்களா என கமெண்ட்டுகள் குவிந்த நிலையில், வெளியே வந்தும் இருவரும் ஒருவரை ஒருவர் தொடர்ந்து காதலித்து வருவது ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளது.

பாவனி பிறந்தநாள்: லாகின் எனும் இந்தி படத்தில் அறிமுகமான பாவனி ரெட்டி தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும், சின்னத்திரை தொடர்களிலும் அதிகம் நடித்து வந்த நிலையில், கடைசியாக பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரிய மேடையாக அமைந்தது. இன்று தனது பிறந்தநாளை பாவனி கொண்டாடி வரும் நிலையில், அவரது காதலர் அமீர் அவருக்கு சூப்பரான பிறந்தநாள் வாழ்த்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Bigg Boss Pavani celebrates her birthday today and Amir sends a superb wish

முதல் கணவர் தற்கொலை: சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது பிரதீப் குமார் எனும் நடிகரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் பாவனி. ஆனால், திடீரென இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்த நிலையில், பிரதீப் குமார் தற்கொலை செய்துக் கொண்டு மரணித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் இன்னொரு திருமணத்துக்கு அவர் ரெடியாகி அந்த திருமணமும் கைகூடவில்லை.

Bigg Boss Pavani celebrates her birthday today and Amir sends a superb wish

சந்தோஷப்படுத்திய அமீர்: இப்படி வாழ்க்கையில் பல கசப்பான அனுபவங்களுடன் சோகத்தில் பிக் பாஸ் வீட்டுக்கு வந்த பாவனியை எந்தளவுக்கு ஹேப்பியாக்க முடியுமோ அந்தளவுக்கு சந்தோஷப்படுத்தி தனது காதலியாகவே மாற்றி விட்டார் அமீர். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வரும் நிலையில், பல இடங்களுக்கும் சுற்றுலா சென்று வருகின்றனர். கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிபார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X