34 வயது ஆச்சு.. காச தவிர எல்லாமே இருக்கு.. பிரதீப் ஆண்டனியின் உருக்கமான பதிவு!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில், பெண் உரிமைக்குரல் எழுப்பியதால், ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி, எக்ஸ் தளத்தில், 34 வயது ஆச்சு, ஆனால், காச தவிர எல்லாமே சம்பாதித்து இருக்கேன் என்று உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த பலர், ஏன் இப்படி என்றாவது ஒருநாள் நல்லது நடக்கும் வருத்தப்படாதீர்கள் என்று ஆறுதல் கூறிவருகின்றனர்.
அருவி படத்தில் நடித்த பிரதீப் ஆண்டனி சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான வாழ் படத்திலும் கவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டாடா படத்திலும் நடித்துள்ளார். உதவி இயக்குநரான பிரதீப் ஆண்டனி படம் இயக்கப் போவதாக தெரிவித்து வந்த நிலையில், பிக் பாஸ் ஏழாவது சீசனில் கலந்து கொண்டார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில், அர்ச்சனா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்ட நிலையில், மணி ரன்னராகவும், மாயா 3-வது இடமும், தினேஷ் 4-வது இடமும் பிடித்தனர்.

ரெட் கார்டு: இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட, பூர்ணிமா, ஜோவிகா விஜயகுமார், ஐஷூ, ரவீனா, விசித்ரா உள்ளிட்ட பலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர். இதில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரதீப்பிற்கு ரசிகர்களிடம் ஆதரவு இருந்த நிலையில், அவருக்கு ஜோவிகா, மாயா, பூர்ணிமா, ஐஷூ உள்ளிட்டோர் உரிமைக்குரல் எழுப்பியதை தொடர்ந்து பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

குறும்படம் மூலம் விளக்கம்: இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, அனைத்தையும் ஆராய்ந்து பேசும் கமல், சரியாக விசாரிக்காமல் பிரதீப்பை வெளியில் அனுப்பியது தவறு என கமலுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்தன. இதனால், டென்ஷனான கமல், குறும்படத்தை போட்டுக்காட்டி, பிரதீப் ஆண்டனிக்கு நான் ரெட் கார்டு கொடுக்கவில்லை. நீங்கள் தான் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினீர்கள் என்று இணையத்தில் எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரதீப், தனக்கு அளிக்கப்பட்ட ரெட் கார்டுடன், தனது பெண் தோழிகளுடன் இணைந்து புகைப்படம் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
உருக்கமான பதிவு: இந்நிலையில், பிரதீப் ஆண்டனி தனது எக்ஸ் தள பக்கத்தில் 34 வயது ஆச்சு.. திரும்பி பாத்தா காச தவிற எல்லாமே சம்பாதிச்சு இருக்கேன்.. எதுமே இல்லடா போதும் எனக்கு நல்ல சாப்பாடு போட்டு, படிக்க வெச்சு, இன்னும் என் பேஷனுக்காக சப்போர்ட் பண்ணிட்டு இருக்கும் என் நண்பர்களுக்கும் குடும்பத்துக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது என உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டு, தனது சிறு வயது போட்டோவையும் ஷேர் செய்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் வருத்தப்படாதீங்க எல்லாமே நல்லா நடக்கும் என்று அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











