Pradeep Antony: கேம் ஓவர்.. பிரதீப் ஆண்டனி கோரிக்கையை நிராகரித்த பிக் பாஸ் டீம்?.. அவ்ளோதான்!
சென்னை: சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கான இந்த வார ஷூட்டிங் இன்று நடைபெற்று வரும் நிலையில், கடைசியாக பிரதீப் ஆண்டனி தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என வைத்த கோரிக்கைக்கு நிர்வாகம் சம்மதிக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து பெண்கள் பாதுகாப்புக்கு பிரதீப் ஆண்டனியால் பாதிப்பு இருக்கு என கமல்ஹாசன் வெளியே அனுப்பி விட்டார்.
பிரதீப்பை வெளியே அனுப்பவில்லை என்றால், தான் வெளியேறி இருப்பேன் என்றும் கூறியிருந்தார்.

அதிகரித்த ஆதரவு: பிரதீப் ஆண்டனிக்கு அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட நிலையில், அவருக்கு பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் ஆதரவு அதிகரித்தது. அதே போல இந்த வார நிகழ்ச்சி முழுவதுமே பிரதீப் குறித்து நாங்க ஒண்ணுமே சொல்லல என்கிற ரேஞ்சுக்கு புல்லி கேங் பல்டி அடித்த நிலையில், மீண்டும் ஒரு வாய்ப்புக் கொடுக்க பிரதீப் ஆண்டனி கேட்டு ட்வீட் போட்டிருந்தார்.
வாய்ப்பு கேட்ட பிரதீப்: தனக்கு வெளியே இருக்கும் சப்போர்ட்டை பார்த்து ஹேப்பியான பிரதீப் ஆண்டனி இதை வைத்துக் கொண்டு மீண்டும் பிக்பாஸ் டீமிடம் வாய்ப்பு கேட்டால் தருவார்கள் என்கிற கனவுடன் முட்டிப் பார்த்தாரா என தெரியவில்லை. தற்போது அவர் மீண்டும் உள்ளே வர வாய்ப்பே இல்லை ராஜா என சொல்லி அனுப்பி விட்டதாகவே தெரிகிறது. பெண்களுக்கு எதிரானவன் என தன் மீது சுமத்தப்பட்ட சிகப்பு கறையை போக்க பிரதீப்புக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
கேம் ஓவர்: அந்த விரக்தியிலேயே தற்போது பிரதீப் ஆண்டனி சிப்பாய்கள் எல்லாம் சேர்ந்து ராஜாவை வீழ்த்தி விட்டனர் என செஸ் போர்டு போட்டோவை போட்டு கேம் ஓவர் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இது போனால் போகட்டும் விடுங்க பிரதீப் உங்க திறமைக்கு நீங்க பெருசா ஷைன் ஆவீங்க என ரசிகர்கள் ஆதரவு கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
கமல் தான் காரணமா?: பிரதீப்பை மீண்டும் விளையாட்டுக்குள் சேர்க்கவே கூடாது என்பதில் கமல் தான் உறுதியாக இருந்தாரா? அல்லது நிகழ்ச்சி நிர்வாகம் எடுத்த முடிவா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவுக்கு கூட பிரதீப் ஆண்டனி வரமுடியாது என்றே தெரிகிறது.
பூர்ணிமா அவுட்: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து பூர்ணிமா ரவி தான் வெளியேறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. உள்ளாடை சர்ச்சையில் சிக்கி மிகவும் மோசமாக அவரது பெயர் டேமேஜ் ஆன நிலையில், குறைவான ஓட்டுக்களுடன் எவிக்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். பிரதீப்புக்கு எதிராக மோசமான புகாரை பூர்ணிமா கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











