பிரதீப் ஆண்டனிக்கு நடந்த நல்ல விஷயம்.. நிச்சயதார்த்தம் முடிந்தது.. விரைவில் திருமணம்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்ட பிரதீப் ஆண்டனி அந்த நிகழ்ச்சியின் மூலம் வெகு பிரபலம் ஆகினார். அவரை கட்டம் கட்டி வீட்டிலிருந்து வெளியே அனுப்பிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டை அவரது ரசிகர்கள் முன்வைத்தனர். மேலும் நிகழ்ச்சி ஆரம்பித்த சமயத்தில் பிரதீப்தான் டைட்டில் வின்னர் ஆவார் என்றும் ஆரூடம் கூறப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு.. இந்தச் சூழலில் பிரதீப் ஆண்டனி தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக அறிவித்திருக்கிரார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் ஹாட் டாபிக்காக இருந்தது பிரதீப் ஆண்டனி. அவர் இருந்தால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாயா, பூர்ணிமா, ஜோவிகா உள்ளிட்டோர் கமலிடம் குற்றச்சாட்டு வைத்ததை அடுத்து அவர் வீட்டில் இருக்கலாமா என்பது கூறித்து ஹவுஸ் மேட்ஸ் அனைவரிடமும் கருத்து கேட்டார். அவர்கள் பெரும்பாலானோர் ஒத்துக்கொள்ளாததால் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

நியாயமே இல்லை: பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயும், வெளியேயும் எதிர்ப்பு கிளம்பியது. முக்கியமாக நிக்சன் எல்லாம் ஐஷுவிடம் வரம்பு மீறி நடந்துகொண்டார். அவரும் பெண்களை பற்றி தரக்குறைவாக பேசியிருக்கிறார்; மாயா, பூர்ணிமா ஆகிய இருவரும் எத்தனையோ அடல்ட் காமெடிகளை சொல்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க பிரதீப்பை மட்டும் வெளியேற்றியது நியாயமே இல்லை என்றனர் பலர்.
ஒரு சான்ஸ் ஏன் கொடுக்கல?: பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு ஒருபக்கம் எதிர்ப்பு தெரிவித்த மக்கள்; பிரதீப் தரப்பு விளக்கத்தையோ அல்லது பதிலையோ கமல் ஹாசன் கேட்கவே இல்லை. இதெல்லாம் உச்சக்கட்ட அநியாயம் என்றும் ஓபனாகவே பேசினர். ஆனால் கமல் ஹாசனோ கடைசிவரை வாயை திறக்கவே இல்லை. அதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கூல் பிரதீப்: அதேசமயம் கமல் ஹாசனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதீப் ஆண்டனி தன்னுடைய வாழ்த்தோடு, நல்லா இருங்க, தீர விசாரிப்பதே மெய் என்று கூறி கமல் ஹாசனுக்கும் பதிலடி கொடுத்தார். அவரது இந்த ட்வீட் ட்ரெண்டாகி மேற்கொண்டு அவருக்கான ஃபேன்ஸ் பாலோயிங்கை அதிகரித்தது. இதற்கிடையே அவர் டாடா உள்ளிட்ட படங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி; இப்போது இயக்குநராக வேண்டும் என்ற லட்சியத்தில் உறுதியாக இருக்கிறார்.
நிச்சயதார்த்தம்: இந்நிலையி பிரதீப் ஆண்டனியின் திருமண நிச்ச்யதார்த்தும் முடிந்திருக்கிறார். அவர் நீண்ட காலம் காதலித்துவந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள். நடந்து முடிந்த நிச்சயதார்த்தத்தில் அவர்களுக்கு நெருங்கிய உறவினர்களும், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். தனது நிச்சயதார்த்தம் குறித்து சமூக வலைதள பக்கத்தில் பிரதீப் ஆண்டனி, 'எனக்கெல்லாம் நடக்காது என்று நினைத்தேன். பரவாயில்லை என்னை நம்பி பொண்ணு கொடுத்துவிட்டார்கள். 90ஸ் கிட்ஸ் சோதனை' என்று ஜாலியாக பகிர்ந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











