திருமணம் முடிந்த உடனே ஃபர்ஸ்ட் நைட் வீடியோ வெளியிட்ட பிரதீப் ஆண்டனி.. இதுலயும் குசும்பு!
சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான நடிகர் பிரதீப் ஆண்டனிக்கு நேற்று திருமணம் நடைபெற்ற நிலையில், தனது எக்ஸ் தள பக்கத்தில் பர்ஸ்ட் நைட் வீடியோவை வெளியிட்டு உள்ளார். இதைப்பார்த்த இணையவாசிகள் கருப்பன் குசுப்புக்காரன் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
நடிகை அதிதி பாலன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த அருவி படத்தில், துணை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் பிரதீப் ஆன்டனி.அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும் அந்த கதாபாத்திரம் பேசும்படியாக இருந்தது.இதைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு வாள் படத்தில், பிரதீப் ஆன்டனி நாயகனாக நடித்து பலரின் கவனத்தை பெற்றார்.

பிரதீப் ஆண்டனி: நடிகர் கவினின் நண்பரான பிரதீப் ஆண்டனிக்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர், சிறு வயதில் அம்மா, அப்பாவிற்கும் ஏற்பட்ட சண்டையில், அம்மாவை அப்பா கொன்றுவிட்டார். இந்த குற்ற உணர்ச்சியால் அப்பா குடித்து குடித்து கடைசியில் இறந்துவிட்டதால், பின் சித்தி தான் தன்னை வளர்த்ததாக கூறினார்.. மேலும், தனக்கு ஒருவிதமான மனநோய் அதாவது ஓசிடி இருக்கிறது என்று கூறியிருந்தார்.
ரெட் கார்ட்: மேலும், பிக் பாஸ் வீட்டில் பலவிதமான சேட்டைகளை செய்து பூர்ணிமா, மாயா, ஜோவிகா ஆகியோரின் வெறுப்பை பெற்றார். இதையடுத்து,பிக்பாஸ் வீட்டில் இருந்த பெண்கள் பலர் இவருக்கு எதிராக உரிமை குரல் எழுப்பினார்கள். அதாவது, நைட்டில் முறைத்து பார்க்கிறார், அவரை பார்த்தால் பயமாக இருக்கிறது. பாதுகாப்பு இல்லை என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை எழுப்பினர். இதன் காரணமாக பிரதீப் ஆண்டடினிக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.
வெச்சி செய்த பேன்ஸ்: இதைத்தொடர்நது பிரதீப்புக்கு அதிராக ஒரு ஆர்மியே உருவாகி கமலை கண்டித்து பலர் விமர்சனங்கள் வந்தது. மாயாவின் சூழ்ச்சியால் தான் பிரதீப் வெளியேறி விட்டதாக ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை வைத்தனர். இதன் காரணமாக இறுதியில் மாயாவை வெற்றி பெறச் செய்யாமல் அர்ச்சனாவுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெற வைத்தனர். பிரதீப்பை வெளியேற்றிய மாயாவை ஜெயிக்க விடக்கூடாது என ரசிகர்கள் முனைப்புடன் இருந்தனர்.

திருமணம்: பிரதீப் ஆண்டனிக்கு கடந்த ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயம் நடைபெற்று திருமண தேதியை அவர் அறிவிக்காமல் இருந்தார். அவரின் ரசிகர்கள் அனைவரும் எப்போது திருமணம் என கேட்டு வந்த நிலையில், நேற்று மிகவும் எளிமையாக தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமண போட்டோவை பிக் பாஸ் சுரேஷ் தாத்தா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தால்ர. போட்டோக்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, ரசிகர்கள், நண்பர்கள், திரை பிரபலங்கள் பிரதீப் ஆண்டனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
குசும்புக்காரன்: இந்நிலையில், பிரதீப் ஆண்டனி தனது எக்ஸ் தள பக்கத்தில், ஒரு பர்ஸ்ட் நைட் வீடியோவை வெளியிட்டு வாழ்த்துக்களுக்கு நன்றி என பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் பெண் பால் சொம்புடன் இருக்க, ஷோபா சிறுவன் இத நினைச்சு நான் ஒருவாரமா தூங்கவே இல்ல, ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என்று பேசுவது போல வீடியோ வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர் நக்கல்யா என்றும், குசும்புக்காரன் என்றும் இணையத்தில் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











