Just In
- 27 min ago
குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டாரா? குடியிருப்புவாசிகள் புகார்.. நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்!
- 13 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 13 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 13 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
Don't Miss!
- News
நாம் யானையை எப்படி பார்க்கிறோம்.. யானை நம்மை எப்படி பார்க்கிறது? நீங்களே பாருங்க!
- Lifestyle
இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் பணப் பிரச்சனையை சந்திப்பாங்களாம்...
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரியோவின் தலைமுடியை அப்படி கோதிய ஷிவானி.. எல்லாம் என்ன மேட்டர்னு தெரியுமா? இந்த வாரம் இருக்கு!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் ஆரம்பமாகி உள்ளது.
இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக ஃப்ரீஸ் டாஸ்க் ஆரம்பமானது குறித்து பிக் பாஸ் கொடுத்த அறிக்கையை ரியோ படித்தது செம காமெடி.
முதல் ஆளாக ரியோவை ஃப்ரீஸ் பண்ணி பிக் பாஸ் செமயா கேம் ஆடிட்டார். சோம் டாய்லெட்டுக்குப் போகும் போது ஃப்ரீஸ் பண்ணதை அன்சீனிலேயே வைத்து விட்டனர்.

லக்சரி பட்ஜெட்டுக்காக
பிக் பாஸ் வீட்டில் வார வாரம் ஒரு சிறப்பான லக்சரி பட்ஜெட் டாஸ்க் வரும், போட்டியாளர்களின் திறமை, சண்டை, பிரச்சனை எல்லாமே அந்த டாஸ்க்கின் மூலமாகவே வெளி வரும். எந்த ஒரு சீசனிலும் இதன் ஆர்டர்களை மாற்றியோ, அல்லது புதிதாக ஒரு விஷயத்தையோ கொண்டு வராமல் அரைத்த மாவையையே திரும்ப திரும்ப அரைத்து வருகின்றனர். இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக அமைந்துள்ளது.

பிக் பாஸ் ஐயா
லக்சரி டாஸ்க் என்ன என்பது ரியோ படித்த அந்த அறிவிப்பில் வெளியிடவில்லை. எல்லாரும் பிக் பாஸ் ஐயா என கெஞ்சி கேட்ட பிறகே சொல்வேன் என எழுதி அனுப்பிய பிக் பாஸை நோக்கி ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் பிக் பாஸ் ஐயா என கெஞ்ச, அனைவரையும் ஃப்ரீஸ் செய்து பின்னர் ரிலீஸ் செய்த பிக் பாஸ் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் என்பதை அறிவித்தார்.

முதல் பலிகடா
பிக் பாஸ் அறிவிப்பை தொடர்ந்து ஜாலியா கலாய்த்துக் கொண்டு சென்ற ரியோவை முதல் ஆளாக ஃப்ரீஸ் செய்தார் பிக் பாஸ். ரியோ வீட்டில் இருந்து ஆட்கள் வரப் போகின்றனரா? புரமோவில் காட்டவில்லையே என நினைத்த ரசிகர்களுக்கு, அது பிக் பாஸின் பிராங்க் என்பது பின்னர் புரிந்தது.

மாட்டிக்கிட்ட கேபி
ரியோவின் அருகே வந்த கேபி ஆடாமல் அசையாமல் நிற்கும் ரியோவை கிண்டல் செய்ய ஆரம்பிக்க, உடனே பிக் பாஸ் கேபியையும் ஃப்ரீஸ் செய்து விட்டார். இருவரும் ஃப்ரீஸ் ஆகி நிற்பதை பார்த்த ரம்யா பாண்டியன் இது ஃபன் என சொல்ல, ஆரியும் ரம்யாவும் சிரித்தனர். அங்கே வந்த ஆஜீத் மற்றும் ஷிவானி இருவரையும் சீண்டி பார்க்க ஆரம்பித்தனர்.

ஷிவானிக்கு தண்டனை
ரியோவின் தலையை கோதிய ஷிவானியை லூப் என சொல்லி பிக் பாஸ் தொடர்ச்சியாக ரியோவின் தலையை கோதும் தண்டனையை கொடுத்து விட்டார். இன்னும் கொஞ்ச நேரத்தில் அம்மா வந்து பிளக்கப் போவது தெரியாமல் ஷிவானி ஜாலியாக சிரித்துக் கொண்டே ரியோவின் தலையை கோதினார். ஆஜீத் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்தார்.

காத்துல என்ன பண்ணுது
மேலும், ரியோவை ரிலீஸ் பண்ண பிக் பாஸ், ஷிவானியை காத்துலயே முடியை கோத விட்டு விட்டார். ஷிவானி காத்துல கை வைத்து பண்ணுவதை பார்த்து மொத்த ஹவுஸ்மேட்களும் கலாய்த்து சிரிக்க ஆரம்பித்தனர். இப்படி ஜாலியாக ஆரம்பித்த ஃப்ரீஸ் டாஸ்க்கில் என்ன என்ன புயல்களும், கண்ணீர் மழைகளும் வரப் போவது என்பதை பார்ப்போம்.