பிக்பாஸிலிருந்து வெளியேறிய பிரவீன் காந்தி.. தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் ரகளை.. புது பிரச்னை ஸ்டார்ட்
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தியேட்டர்களில் படம் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிடப்பட வேண்டும், முன்னணி நடிகர்கள் பட வியாபாரத்தில் பங்கு பெற்றுத்தான் நடிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் கூட்டத்தில் களேபரம் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை எக்மோரில் இருக்கும் தனியார் மண்டபம் ஒன்றில் நடந்தது. இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். அவர்களில் இயக்குநர் பிரவீன் காந்தியும் ஒருவர். இக்கூட்டத்தில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் நடிகர்களில் கால்ஷீட், சம்பளம் தொடர்பான தீர்மானங்கள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.
வெடித்த மோதல்: இப்பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டபோது சத்தமாக வாசிக்கவில்லை என்று தெரிகிறது. அதனையடுத்து பின் வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் கூறியது சிறிது நேரத்தில் சலசலப்பாக மாறியது. தொடர்ந்து மேடையில் அமர்ந்திருந்தவர்கள் கீழே இறங்கிவந்து மீண்டும் அந்தத் தீர்மானங்களை வாசித்தார்கள்.
ஆனால் கீழே அமர்ந்திருந்த ஒருதரப்பினர் மேடையில் அமர்ந்திருந்த பிரவீன் காந்தி உள்ளிட்டோரை பார்த்து தொடர்ந்து கேள்விகளை எழுப்பினார்கள். அதுமட்டுமின்றி பழைய பிரச்னைகளையும் மீண்டும் கிளப்பியதால் இரண்டு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. அதில் பிரவீன் காந்தி குரல் கொஞ்சம் உயர்ந்தே இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மோதலின்போது அங்கே இருந்த செய்தியாளர்களை பார்த்தும் நீங்கள் எல்லாம் வெளியே செல்லுங்கள் இது எங்கள் குடும்ப பிரச்னை என்று கூறவும் செய்தார்கள். இந்த மோதல் சம்பவத்தால் பொதுக்குழு கூட்டம் நடந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: முன்னதாக இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரங்களும் வெளியாகியிருக்கின்றன. அவை பின்வருமாறு,
"1. கடந்த 2023 மே மாதம் முதல் 2025 அக்டோபர் மாதம் வரை நடைபெற்ற செயற்குழுவில் எடுத்த தீர்மானங்களுக்கு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
2. ஏற்கனவே சங்கத்தில் தணிக்கையாளராக உள்ள M/s. Hariharan & Co மற்றும் வழக்கறிஞர் திரு.கிருஷ்ணா ரவீந்தரன் ஆகியோர் சங்கத்தில் தொடர பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
3. நமது சங்கத்தில் வாக்களிக்க தகுதி உள்ள வாக்காளர் பட்டியலை சரிபார்த்து அங்கீகரிக்க நிர்வாகிகளுக்கு ஒப்புதல், மற்றும் ஏற்கனவே சங்க செயற்குழு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்காலிக நீக்கம் செய்தவர்களான திரு.திருமலை (M/s. T. Cretions) திரு.தீர்த்தமலை (M/s. T.A Art Cretions) . (M/s. 3rd Eye Media Vision). திரு.சண்முகம் (M/s. Jayaram Productions) திருமதி.ராஜேஸ்வரி வேந்தன் (M/s. Thaimann Thirayagam) ஆகியோர், சங்கத்தின் செயற்குழு எடுத்த ஒழுங்கு நடவடிக்கையை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ( : O.S. No: 5379 of 2025, O.S.No. 6222 of 2025, O.S.No. 6185 of 2025, O.S.No. 6221 of 2025, O.S.No. 6223 of 2025) அந்த வழக்கானது நிலுவையில் உள்ளது. மேலும், அவர்கள் தொடர்ந்த வழக்கில் இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை இந்த பொதுக்குழுவில் தெரிவித்துக் கொள்கிறோம்.
4. தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள், இயக்குனர்கள், முன்னனி தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் தயாரிப்பாளர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களுக்கு மாறாக திரைப்படங்கள் மட்டுமின்றி வெப்சீரியஸ்களில் தங்கது பங்களிப்பை அதிகமாக அளித்து வருகிறார்கள். பொதுமக்களிடம் திரைப்படங்கள் காணும் தொடங்கியுள்ளது. இதனால், தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும், மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் திரைத்துறைக்கு மட்டுமின்றி அரசுக்கு வரும் வருமானமும் பாதிக்கப்படுகிறது. எனவே, நடிகர்கள், இயக்குனர்கள், முன்னனி தொழில்நுட்ப கலைஞர்கள் வெப்சீரியஸ்களில் கவனம் செலுத்துவதை விட்டு, சரிந்து வரும் சினிமாவை காப்பாற்றி திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவ்வாறு செயல்படாத எந்த ஒரு நடிகர், இயக்குனர், முன்னனி தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சம்பந்தப்பட்ட சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்ககூடாது என்றும் அவர்களின் திரைப்படங்களை திரையரங்குகளில் திரையிட கூடாது என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அவர்களின் உறுப்பினர்களிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் இந்த பொதுக்குழுவில் ஒட்டுமொத்த தயாரிப்பாளர்கள் சார்பாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
5. தமிழ் சினமா தற்போது OTT மற்றும் சாட்டிலைட் வியாபாரம் சரிந்து வரும் இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு மற்ற மாநிலங்களில் உள்ளது போல நடிகர்கள் மற்றும் முன்னனி தொழில்நுட்ப கலைஞர்கள் Revenue Share படம் நடிக்க வேண்டும் தயாரிப்பாளர்களின் லாப நஷ்டங்களில் பங்கு கொள்ள வேண்டும் என்று பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. ஆகையால் இனிவரும் காலங்களில் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் Revenue Share-ல் மட்டுமே தயாரிப்பது என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மேலும், OTT மற்றும் சாட்டிலைட் வியாபாரம் சரிந்து வரும் இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு இயக்குனர்கள் திரையரங்க வியாபாரத்திற்கு ஏற்றால் போல் தங்களது திரைப்படங்களை உருவாக்க தயாரிப்பாளருக்கு பட்ஜெட் தயார் செய்து 阿 வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
6. அதே போல தமிழ்த் திரைப்பட மறுசீரமைப்பு குறித்து தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத்தொகுப்பாளர்கள் சங்கம். தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம். ஆகிய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தங்களை மீறி செயல்படும் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மீது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் (TFPC) மற்றும் தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) இணைந்த JAC நடவடிக்கை மேற்கொள்ளும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
7. ஆன்லைன் டிக்கெட் புக்கிங் என்ற இணையதள புக்கிங்கை தமிழ்நாடு அரசாங்கம் ஏற்று நடத்த வேண்டும் என்று இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
8. திரைப்படத்தின் விமாசனம் என்று வரம்பு மீறி செயல்படும் Youtube-சேனல்கள் மீது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், பி.ஆர்.ஓ. யூனியன் ஆகிய அமைப்புகள் இணைந்து சட்டரீதியாகவும், திரைத்துறை ரீதியாகவும் நடவடிக்கை மேற்கொள்ளும் பொதுக்குழுவில் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
9. எந்த ஒரு தனியார் அமைப்பு விருது வழங்கும் விழா அல்லது இசை நிகழ்ச்சி நடத்தினால் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கததின் அனுமதி கடிதம் பெற்ற பின்னர் தான் நடத்த வேண்டும். அவ்வாறு அனுமதி கடிதம் பெறாமல் விழா நடத்தப்படும் தனியார் அமைப்புகள் மீது சட்டரீதியாகவும், திரைத்துறை ரீதியாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொதுக்குழுவில் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
10. நமது சங்கத்தின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருந்தபொழுது இந்த நிர்வாகம் பொறுப்பேற்று கடந்த 5-ஆண்டு காலமாக
[17:12, 09/11/2025] vikram muthu: செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நமது சங்கத்தின் நிதிநிலமையை மேம்படுத்துவதற்காக சங்கத்தின் மூலம் கலைநிகழ்ச்சிகள் இசைநிகழ்ச்சிகள் நடத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
11. தமிழ்த் திரைப்படங்கள் வருடத்திற்கு சுமார் 300 திரைப்படங்கள் வெளியாகிறது. அதில், குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் 250 வரை வெளியாகிறது. இதனால் சிறிய முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு சரியான முறையில் திரையரங்குகள் கிடைப்பதில்லை. இதனை சரிசெய்யும் பொருட்டு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அடங்கிய திரைப்பட வெளியீட்டு ஒருங்கிணைப்பு குழு (Release Regulation Committee) அமைக்க பொதுக்குழுவில் திரமானம் நிறைவேற்றப்படுகிறது..
12. கடந்த 2017ம் வருடம் ஏப்ரல் மாதம் தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், மற்றும் ஞரடிந ஆகியோர் தமிழ்நாடு அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது, Projector cost முடிந்துள்ள Projectorகளுக்கு இனி வரும் காலங்களில் கட்டணம் இல்லை என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும், VPF தொகையினை திரையரங்கு உரிமையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் தயாரிப்பாளர்கள் VPF தொகையினை கட்டமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு நிர்வாகத்திடம் தெரிவித்து முடிவு சொல்கிறோம் என்று கூறினார்கள்.
ஆனால் அது நடைமுறைப் படுத்தப்படவில்லை. ஆகையால் தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் Projector cost முடிந்துள்ள Projectorகளுக்கு VPF தயாரிப்பாளர்கள் கட்ட மாட்டார்கள் என்று முடிவெடுத்துள்ளோம். மேலும், டிஜிட்டல் சர்வீஸ் புரொவைடர்களில் ஒருவரான Qube நிறுவனத்தில் பேசி, தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் தரவேண்டிய பாக்கி தொகையினை திரும்ப அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த தொகையினையும் தயாரிப்பாளர்களுக்கு உடனடியாக Qube அளிக்க வேண்டும். அதே போல, திரையரங்குகளில் திரையிடப்படும் விளம்பரங்களில் இருந்து வரும் வருமானத்தில் தயாரிப்பளார்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பங்கு பிரித்து தர வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
13. திரையரங்கு மற்றும் விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகளுடன் கடந்த 2024-செப்டம்பர் மாதத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்களிலும் கனிணிமயமாக்க பட வேண்டும் என்றும், அனைத்து திரையரங்களுகளையும் ஒருங்கிணைக்கும் Centralized server உருவாக்க வேண்டும் என்றும், முன்னனி நடிகர்களின் திரைப்படங்கள் 8-வாரங்கள் கழித்து தான் OTT-யில் வெளியாகவேண்டும் என்றும். அடுத்தகட்ட நடிகர்கள் திரைப்படங்கள் 6-வாரங்கள் கழித்து தான் OTT-யில் வெளியாக வேண்டும் என்றும், சிறிய முதலீட்டு திரைப்படங்கள் 4-வாரங்கள் கழித்து தான் OTT-யில் வெளியாக வேண்டும் என்றும் பேசப்பட்டுள்ளது. மேலும், Centralized server உருவாக்கப்படும் பட்சத்தில் தயாரிப்பாளர்கள் அவர்களுடைய திரைப்படங்களின் வசூலை இருந்த இடத்திலேயே பார்த்துக்கொள்ள முடியும். மேலும், டிக்கெட் புக்கிங் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி டிக்கெட் புக்கிங்கில் ஒரு குறிப்பிட்ட சதவிகதம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் பேசப்பட்டுள்ளது அதனை தற்போது உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுக்குழு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
14. 2026-2029ம் ஆண்டுகளுக்கான நமது சங்கத்தின் தேர்தலை வருகிற டிசம்பர் மாதம் நடத்த பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. மாண்புமிகு உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.எஸ்.ராஜேஸ்வரன் அவர்கள் பொறுப்பேற்று அதன் பின்னர் தேர்தல் தேதி முறைப்படி அனைத்து வாக்களிக்க தகுதியுள்ள உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். இவர் ஏற்கனவே நமது சங்கத்திற்கு கடந்த 2017ம் ஆண்டு தேர்தல் நடத்தியவர் ஆவார்.
15. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் இடையேயான, ஏற்கனவே 2022-ல் உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை தொடர வேண்டும் என்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவினை பின்பற்றி புதிய பேச்சுவார்த்தை நடக்கும் வரை பழைய ஊதியம் மற்றும் பணி வழிமுறைகளை தொடர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மேற்படி உத்தரவிற்கு பெரிதும் உறுதுணையாக இருந்த மாண்புமிகு ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.எம்.கோவிந்தராஜ் அவர்களுக்கு இந்த பொதுக்குழுவில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
16. தமிழ்த் திரைப்படங்களின் படத்தலைப்பு சம்பந்தமாக சமீபகாலத்தில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருவதால், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம் மட்டுமே தமிழ்த் திரைப்படங்களின் படத்தலைப்பு பதிவு செய்வது சம்பந்தமாக மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் பேசி, முறைப்படுத்தி சீர்திருத்தங்கள் கொண்டுவர இந்த பொதுக்குழுவில் திர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
17. தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளர்களுக்கு சேரவேண்டிய அனைத்து உரிமைகளையும் (All Rights & Royalty) பெற்றுத் தர தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.


Click it and Unblock the Notifications











