என் வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங்களை சந்தித்துள்ளேன் … மனம் திறந்த பிரியங்கா!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்துள்ள பிரியங்கா ரசிகர்களின் பல கேள்விக்கு தனது யூடியூப் சேனல் மூலமாக சுவாரசியமாக பதில் அளித்துள்ளார்.

Recommended Video

Thamarai Selvi சீக்கிரம் வெளிய போயிட்டா Priyanka First live After Bigg Boss | Filmibeat Tamil

பிக் பாஸ் வீட்டில் எத்தனை சண்டைகள் போட்டாலும் அடுத்த நொடி அதை மறந்து விட்டு, அனைவர் இடத்திலும் கட்டிப்பிடித்து அன்பு பாராட்டினார் பிரியங்கா. முன்பு இருந்ததைவிட தற்போது பிரியங்காவுக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.

தனது யூடியூப்

தனது யூடியூப்

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ரன்னரப்பாக வந்த பிரியங்கா தனது யூடியூப் சேனலில் ரசிகர்களிடம் பேசினார். அதில் இந்த நிகழ்ச்சிக்கு போனதே ஒரு சவாலான விஷயம் தான். போவதற்கு முன்பு பலரும் வேண்டாம் என்றார்கள். இருந்தாலும் நான் இதில் கலந்து கொள்ள வேண்டும் பிரியங்கா எப்படி என்பதை மக்களுக்கு காட்ட வேண்டும் என்று நினைத்தேன். அந்த ஆசை நிறைவேறி உளளது. தற்போது கிடைத்திருக்கும் வெற்றி உங்களால் எனக்கு கிடைத்தது என்றார்.

பல ஏமாற்றங்கள்

பல ஏமாற்றங்கள்

என் வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங்களை நான் சந்தித்து இருக்கிறேன். அதை எப்படியாவது கடந்து போக வேண்டும் என்று நினைத்து ஓடிக்கொண்டே இருப்பேன். நான் நேசிக்கும் வேலை மட்டும் தான், என்னை சந்தோஷப்படுத்தியது. எந்த ஒரு கஷ்டத்தையும் என் மூளைக்குள் செல்லாமல் பார்த்துக்கொண்டது என் வேலை என்று மனம் திறந்து பேசினார்.

அபிஷேக் திறமையானவர்

அபிஷேக் திறமையானவர்

பிக் பாஸ் வீட்டில் என்னை அன்பா பார்த்துக் கொண்டவன் அபிஷேக், ஆனால் அவ்வளவு சீக்கிரமா அவர் ஏன் வெளியில் போனார் மீண்டும் ஏன் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தார் என்று தெரியவில்லை. நியூஸ் டாஸ்கின் போது அவரை பார்த்து நானே வியந்து போனேன். அபிஷேக் உண்மையில் திறமையானவர் அவன் வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டும் என்றார்.

அனைவரையும் விரைவில் சந்திப்பேன்

அனைவரையும் விரைவில் சந்திப்பேன்

மற்ற போட்டியாளர்களை இன்னும் சந்திக்கவில்லை, அனைவரும் குடும்பத்துடன் பிஸியாக இருக்கிறார்கள். அதுவும் இல்லாமல் வெளியில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் சந்திக்க முடியவில்லை. விரைவில் அனைவரையும் சந்தித்து ஜீலிபண்ணுவேன் என்றார்.

எல்லை இல்லாத அன்பு

எல்லை இல்லாத அன்பு

பணம், காசு, புகழைவிட அன்பு தான் முக்கியம் என்று நினைப்பவள் நான், என் அம்மா எனக்கு அதைத்தான் கற்றுக்கொடுத்துள்ளார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வரும் போது மக்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயம் இருந்தது. ஆனால், உங்களின் அன்பு எல்லை இல்லாதது இதை என்றும் மறக்க மாட்டேன் என்று பிரியங்கா அழகாக பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X