“நான் திருடவே இல்லை… தெரியாம பண்ணிட்டேன்”: பிக் பாஸிடம் கதறிய தனலட்சுமி… பதறிய ரசிகர்கள்

சென்னை: விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 36வது நாளை எட்டியுள்ளது.

ஜிபி முத்து அவராகவே வெளியேறிவிட சாந்தி, அசல் கோளாறு ஷெரினா, மகேஸ்வரி ஆகியோர் எவிக்சன் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் யார் எவிக்சன் செய்யப்படுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், confection room சென்ற தனலட்சுமி பிக் பாஸ்ஸிடம் கதறி அழும் வீடியோ வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் ஃபேக்டரி டாஸ்க்

பிக் பாஸ் ஃபேக்டரி டாஸ்க்

பிக் பாஸ் சீசன் அ6 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டி நடைபெற்று வருகிறது. பொம்மை டாஸ்க், டிஆர்பி டாஸ்க் ஆகியவற்றை தொடர்ந்து சென்ற ஃபேக்டரி டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில், விக்ரமன் தலைமையில் ஒரு அணியும், தனலட்சுமி தலைமையில் இன்னொரு அணியும் விளையாடினர். அதன்படி பிக் பாஸ் வீட்டில் இரு அணிகளும் தயார் செய்த ஸ்வீட்கள் ஆதரவற்ற குழந்தைகளின் இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் பிக் பாஸ் போட்டியாளர்கள் இரண்டு அணிகளில் யார் வெற்றி பெறுவோம் பார்க்கலாம் என கடுமையாக மோதிக் கொண்டனர்.

விதிகளை மீறிய தனலட்சுமி

விதிகளை மீறிய தனலட்சுமி

ஃபேக்டரி டாஸ்க் போட்டியில் தனலட்சுமி - மணிகண்டன், அமுதவாணன் - மணிகண்டன் ஆகியோரிடையே ஏற்பட்ட மோதல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால், தனலட்சுமி யாருக்கும் தெரியாமல் கல்லாப் பெட்டியில் பணத்தை வைக்காமல் மறைத்து வைத்திருந்துள்ளார். பேக்டரி டாஸ்க்கில் தனலட்சுமி வெற்றிப் பெற்றதாக பிக் பாஸ் அறிவித்தாலும், நேற்று அகம் டிவி வழியே பேசிய கமல், விதிமுறைகளை மீறியதை குறும்படம் போட்டு வெட்டவெளிச்சம் ஆக்கினார். அதுமட்டும் இல்லாமல் தனலட்சுமியை கண்டித்ததோடு, வெற்றியும் செல்லாது எனக் கூறினார். இதனால் விக்ரமன் அணி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சிரிப்பில் இருந்து அழுகை

சிரிப்பில் இருந்து அழுகை

முதலில் ஃபேக்டரி டாஸ்க்கில் தனலட்சுமி விதிமுறைகளை மீறியதை கமல் சிரித்துக்கொண்டே சொல்லும் போது தனலட்சுமியும் விழுந்து விழுந்து சிரித்து மகிழ்ந்தார். ஒருகட்டத்தில் யாருமே எதிர்பார்க்காத நிலையில் கமல் இந்தியன் தாத்தாவாக மாறி தனலட்சுமியை புரட்டி எடுத்தார். இதனால் அதிர்ந்து போன தனலட்சுமி கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார். சக போட்டியாளர்கள் அவரை சமாதானம் செய்தும் தனலட்சுமியால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனாலும், தனலட்சுமியை Safe என கமல்ஹாசன் அறிவித்தார்.

மீண்டும் ஒப்பாறி வைத்த தனம்

மீண்டும் ஒப்பாறி வைத்த தனம்

இந்நிலையில், இன்று சக போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்த எவிக்சன் நாமினேஷனில் தனலட்சுமியின் பெயர் தான் டாப்பில் இருந்தது. இதனால் உடைந்து போன தனலட்சுமி confection room சென்று பிக் பாஸ் முன் கதறி கதறி அழுகின்றார். நான் தெரியாமல் செய்துவிட்டேன், திருட வேண்டும் என்று இதை செய்யவில்லை. இந்த விசயம் இவ்வளவு பெரிதாகும் என நான் நினைத்துப் பார்க்கவில்லை. என்னால் இதற்குமேல் இங்கு இருக்க முடியாது என ஒப்பாறி வைத்துள்ளார். ஏற்கனவே இதுபோன்று அடிக்கடி டிராமா செய்துள்ள தனலட்சுமி இன்று உண்மையாகவே அழுது கொட்டித் தீர்த்துள்ளது ரசிகர்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X