முகத்திற்கு நேர பேச தைரியம் இல்லாத… ராஜு, இமான் அண்ணாச்சி… தண்டனை கொடுத்த பிக் பாஸ் !

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 40 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 5 விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, போட்டியாளர்களை கடுப்பேத்துவது போல கலாய்க்கும் டைட்டில் கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அது மட்டும் போதாதுனு விஷ பாட்டில், ஜால்ரா, டம்மி பீஸ் என பல விதமான கிரீடத்தை கொடுத்து போட்டியாளர்களிடையே சண்டையை மூட்டிவிட்டு வேடிக்கை பார்த்தார் பிக் பாஸ்.

கொளுத்திபோட்ட பிக்பாஸ்

கொளுத்திபோட்ட பிக்பாஸ்

என்னடா கிரீடம் மேட்டர்ல சண்டை வரும்னு பார்த்தா ஆளு ஆளுக்கு கிரீடத்தை வாங்கிகிட்டு அமைதியா போய்டாங்க.... இவங்கள இப்படியே விடக்கூடாதுனு நினைச்ச பிக் பாஸ் மற்றொரு விஷயத்தை கொளுத்தி போட்டுள்ளார்.

தைரியம் இல்லாத நபர்

தைரியம் இல்லாத நபர்

அதாவது, பிக் பாஸ் வீடு 40 நாளை தொட்டுள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில், முகத்திற்கு நேராக கருத்துகளை சொல்ல தைரியம் இல்லாமல் தனி தன்மையை இழந்து விளையாடும் இரண்டு போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் படி பிக் பாஸ் கூறினார்.

தண்டனை பெற்ற ராஜு

தண்டனை பெற்ற ராஜு

இதையடுத்து, ஒவ்வொரு போட்டியாளரும் தங்களது கருத்தை கூறினர். இதில், ராஜுவும் அண்ணாச்சியும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை கார்டன் ஏரியாவில் அமர வைத்து மீது குளிர்ந்த தண்ணீர் ஊற்றி தண்டனை வழங்கப்பட்டது. போட்டியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து காரணத்தை சொல்லி தண்ணீர் ஊற்றினார்கள். அப்போது, தாமரை தண்ணீர் ஊற்ற வரும் போது, என்ன சொல்றது தம்பி என்றார், அதற்கு ராஜு செரும்ப கழட்டி அடிக்கிற மாதிரி எதாவது சொல்லு என்றார்.

நாமினேஷனில் ராஜு

நாமினேஷனில் ராஜு

பிக் பாஸ் வீட்டிற்கு ராஜு வந்த நாள் முதல் அவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவு பெருகிக்கொண்டுதான் இருக்கிறது. 5 வாரங்களை கடந்துள்ள நிலையில் இதுவரை நாமினேஷனில் ராஜுவின் பெயர் வந்தது இல்லை. இத்தனை நாட்களுக்கு பிறகு தற்போது தான் அவரின் பெயர் நாமினேஷனில் இருக்கிறது. அவருக்கு ரசிகர்களின் ஆதரவு இருப்பதால் முதல் ஆளாக அவர் சேஃவ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X