சரியான முட்டாள்..அவள நிம்மதியா இருக்க விடுங்க..கடுப்பில் ரச்சித்தாவின் கணவர் போட்ட பதிவு!

சென்னை : ரச்சித்தாவிடம் வழிந்து வழிந்து பேசி வரும் ராபர்ட் மாஸ்டருக்கு, ரச்சித்தாவின் கணவர் அதிரடியான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் தொடங்கி ஒரு மாதத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு தெரிந்த சில முகங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

அந்த வகையில் ராபர்ட் மாஸ்டர் ரசிகர்களுக்கு பரிட்சயமான முகம் தான். அதே போல ரச்சிதா மகாலட்சுமியும் அனைவருக்கும் பிடித்த நடிகை தான்.

ராபர்ட் மாஸ்டர்

ராபர்ட் மாஸ்டர்

ராபர்ட் மாஸ்டர் வீட்டிற்கு வந்த முதல் வாரமே எனக்கு கேர்ள் பிரெண்ட் இல்லை. அதனால் நம்முடைய இந்த நட்பு வெளியில் போயும் தொடர வேண்டும் விரும்புவதாக ரச்சிதாவிடம் ஒரு டாஸ்கின் போது கூறியிருந்தார். அதற்கு ரச்சிதா நம்ம உள்ள வந்து சில நாட்கள் தானே ஆகிறது. பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு நைசாக சென்றுவிட்டார்.

ரச்சித்தா மீது க்ரஷ்

ரச்சித்தா மீது க்ரஷ்

இதையடுத்து, ரக்சிதா புடவை கட்டி வந்த போது அவரை ஏறஇறங்க பார்த்த ராபர்ட் மாஸ்டரை, கவனித்த ஆயிஷா என்ன மாஸ்டர் க்ரஷா என்று கேட்க வழிந்து கொண்டே இருந்த மாஸ்டர், க்ரஷ் இல்ல ஆனால் பிடிக்கும் என்றார். இதையடுத்து, ரச்சிதா எதை செய்தாலும், அதை மாஸ்டர் ரசித்துக் கொண்டே இருக்கிறார். ரச்சிதா எங்கு சென்றாலும் அவர் பின் குட்டிப்போட்ட பூனை போல செல்கிறார்.

முத்தா கொடு

முத்தா கொடு

ஆனால், ரச்சித்தாவோ இதை கண்டுகொள்ளாமல் தன்னுடைய விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த வாரம் ரச்சித்தாவின் கையை பிடித்து இழுத்து முத்தா கொடு என்று கேட்டது ரசிகர்களை மட்டுமில்லாமல் ரச்சிதாவின் மாமியார் உள்ளிட்ட தினேஷின் மொத்த குடும்பத்தினரையும் ஆத்திரமடையச் செய்துள்ளனர்.

சரியான முட்டாள்

சரியான முட்டாள்

தொடர்ந்து ராபர்ட் மாஸ்டர் இதேபோல செய்து வருவதால் ஆத்திரத்தில் இருக்கும் ரச்சித்தாவின் கணவர் தினேஷ் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். ஒரு பெண் சிரித்து பேசி எல்லாரையும் சந்தோசமாக வைத்துக் கொள்கிறார் என்றால், அவள் அனைத்திற்கும் ஆனவர் அல்ல, எல்லா மனிதர்களும் அமைதியான சுதந்திரத்துடன் வாழ்வதற்கு வசதியான சமூகத்தை உருவாக்க இது போன்ற முட்டாள்களைப் போன்ற ஆண்கள் வளர வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X