வைஷ் மாதிரியே சிம்பிளாக காதலரை கரம்பிடித்த பிக் பாஸ் ரம்யா.. யாரெல்லாம் வாழ்த்தியிருக்காங்க பாருங்க
பிக் பாஸ் புகழ் ரம்யா, சீரியல் நடிகர் சத்யாவை திருமணம் செய்து கொண்டார்.
Recommended Video
சென்னை: சீரியல் நடிகர் சத்யாவை திருமணம் செய்து கொண்டுள்ளார் பிக் பாஸ் ரம்யா.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் பாடகி ரம்யா. கலைவாணர் என்எஸ்கேவின் பேத்தி இவர். பிக் பாஸ் சீசன் 2வில் அனைவரையும் பாட்டுபாடி அசத்தினார். அந்த சீசனில் ஜெயிக்கவில்லை என்றாலும், எந்தப் பிரச்சினையிலும் சிக்காமல் நல்ல பெயருடனேயே வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து தனது இசை பயணத்தில் கவனம் செலுத்தி வந்தார் ரம்யா.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நீலக்குயில் சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் சத்யாவை காதலித்து திருமணம் செய்துள்ளார் ரம்யா. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், திடீரென திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்த திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மிக எளிமையாக நடைபெற்றுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடன் கலந்துகொண்ட ஜனனி, மும்தாஜ் உள்ளிட்டோர் இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.
ரம்யா திருமணம் செய்துள்ள சத்யா, பிக் பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்டுள்ள தர்ஷனின் நெருங்கிய நண்பர் ஆவார். எனவே தர்ஷனின் காதலியான சனமும் இந்தத் தம்பதிக்கு நேரில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ரசிகர்களும் சமூகவலைதளப் பக்கம் வாயிலாக ரம்யா, சத்யா தம்பதிக்கு வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 2வில் ரம்யாவுடன் சக போட்டியாளராக கலந்து கொண்ட வைஷ்ணவியும் இதே போல் எளிமையாக திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











