Raveena: புதிய சீரியலில் கமிட்டான நடிகை ரவீனா.. ரசிகர்கள் வாழ்த்து!

சென்னை : ஜில்லா, பூஜை, புலி, ராட்சசன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறுமியாக நடித்தவர் நடிகை ரவீனா டாகா. இவர் டீன் ஏஜை எட்டியவுடன் சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் சீரியல் மூலம் நடிகையாக மாறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகி உள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தங்கம் சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்த ரவீனா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலிலும் நடித்தார். அதன் தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக விளங்கும் விஜய் டிவி ஒளிபரப்பான சீரியலான மௌன ராகம் சீரியலில் லீட் ரோலில் நடித்தார். சீரியலில் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

Bigg Boss Raveena Mouna Ragam

இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகம் சில புதுமுக நடிகர்களுடன் ஒளிபரப்பானது. இதில், ரவீனா சக்தி என்ற கதாபாத்திரத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார். ஜில்லா, ராட்சசன் படத்தில் குட்டி பெண்ணாக இருந்த ரவீனா இந்த சீரியலில் புடவையை கட்டிக்கொண்டு அழகு தேவதையாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.

குக் வித் கோமாளி: சீரியலின் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த ரவீனா, அனைவருக்கும் மிகவும் பிடித்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் கோமாளியாக கலக்கினார். சமூக வலைதள பக்கங்களிலும் முழு ஈடுபாடுடன் இருக்கும் ரவீனா, அவ்வப்போது டான்ஸ் ஆடும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதேபோல் ரவீனா பிரபல நடன கலைஞர் மணி சந்திராவுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்திருந்தார். இதனால், இருவரும் காதலிப்பதாக சொல்லப்பட்டது.

பிக் பாஸில்: இதைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரவீனா சிறப்பாக விளையாடினார். இந்த நிகழ்ச்சியில் மணி சந்திராவுடன் பிக் பாஸ் வீட்டில், ஜோடி புறாவாக சுற்றிவந்தார். பிக் பாஸ் வீட்டில், 90 நாட்கள் வரை இருந்த ரவீனாவிற்கு ஒரு நாளைக்கு ரூ.18 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்பட்டு மொத்தம் 11 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டது.

புதிய சீரியலில்: இந்த நிலையில் நடிகை ரவீனா, தற்போது புது சீரியல் ஒன்றில் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஹா தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் Vera Maari Office 2வது சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் அதாவது கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த தகவலை அறிந்த ரவீனாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X