கர்ப்பமாக இருக்கிறார்களா ஃபேட் மேன் ரவி - மகாலட்சுமி.. இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு என்ன அர்த்தம்?

சென்னை: சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர், பிக்பாஸ் பிரபலமான ரவீந்திரன் சந்திரசேகரன் ஆகியோர் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதால் மிக எளிமையாக திருமணத்தை நடத்த இருவருமே முடிவு செய்ததாக கூறப்பட்டது. இவர்களின் திருமணத்திற்குப் பின்னர் இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு, விவாகரத்து என பல சர்ச்சைகளை இணையவாசிகள் கோர்த்து விட்டுக் கொண்டே வந்தனர். சமீபத்தில் பரப்பட்ட வதந்திகளுக்கு இருவரும் பதிலடி கொடுத்துள்ளார்கள்.

முன்னதாக, மகாலட்சுமி அனில் நெரேடிமில்லி என்பவரை மணந்து சச்சின் என்ற மகனைப் பெற்றெடுத்தார். பின்னர் 2019ஆம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்றனர். ரவீந்திரனும் இதற்கு முன்பு திருமணமாகி விவாகரத்து பெற்றவர். 'விடியும் வரை காத்திரு' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ரவீந்திரனும், மகாலட்சுமியும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டனர். அந்த சந்திப்பு நட்பாக மாறி, பின்னர் காதலாக மலர்ந்தது. திருமணத்திற்குப் பிறகு, சமூக வலைத்தளங்களில் தங்கள் காதல் கதையைப் பகிர்ந்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றனர். "நீங்கள் என் வாழ்க்கையில் இருப்பது என் அதிர்ஷ்டம். உங்கள் அன்பால் என் வாழ்க்கை நிறைந்துள்ளது" என்று மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவீந்திரனுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.

Ravindran Mahalakshmi Instagram Post Netizens Asking its About Their Pregnant Announcement
Photo Credit:

சன் மியூசிக் தொலைக்காட்சியில் வி.ஜே.வாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய மகாலட்சுமி, 'அரசி', 'செல்லமே', 'வாணி ராணி', 'யமிருக்க பயமேன்' மற்றும் 'அன்பே வா' போன்ற பல பிரபலமான தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றார். வி.ஜே. மகாலட்சுமி என்று அன்போடு அழைக்கப்படும் இவர், ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் தனக்கென ஒரு தனி இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துள்ளார்.

பிக்பாஸ் விமர்சகர்: ரவீந்திரன் சந்திரசேகரன் லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவர் 'சுட்ட கதை', 'நாலனும் நந்தினியும்', 'நட்புனா என்னன்னு தெரியுமா', 'முருங்கைகாய் சிப்ஸ்' போன்ற பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். மேலும், யூடியூப் சேனல்களில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி விமர்சகராகவும் கலக்கி வருகிறார். கடந்த சீசனில் பிக் பாஸ் போட்டியாளராக களமிறங்கியவர், வீட்டிற்குள் சென்றும் பிக்பாஸ் போட்டியை விமர்சகராகவே அனுகினார்.

ரவீந்திரன் கைது: 2023 செப்டம்பரில், ரவீந்திரன் 16 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் இருந்தார். ஒரு தனியார் நிறுவனத்திற்கு மின்சார உற்பத்தி திட்டத்தில் முதலீடு செய்வதாக உறுதியளித்து மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். அந்த கடினமான சூழ்நிலையில், மகாலட்சுமி தனது கணவருக்கு உறுதுணையாக இருந்தார். "இதுவும் கடந்து போகும்" என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரவீந்திரனுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

இணையவாசிகள்: ரவீந்திரனும் - மகாலட்சுமியும் ஒற்றுமையாக வாழ்ந்தாலும் இணையவாசிகள் அவர்களுக்குள் பிரச்னை, விரைவில் விவாகரத்து என கட்டுக்கதைகளை கட்டிவிட்டு வருகிறார்கள். இப்படியான நிலையில் மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவீந்திரனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, " எங்கள் இருவருக்கும் உண்மை என்பது நன்றாகவே தெரியும். அதுதான் தற்போது தேவையும் கூட. நாங்கள் இருவரும் நலமுடனும் நிம்மதியுடனும் வாழ்ந்து வருகிறோம்.

Ravindran Mahalakshmi Instagram Post Netizens Asking its About Their Pregnant Announcement
Photo Credit:

குழந்தையா?: இது மட்டும் இல்லாமல் எங்கள் உறவு குறித்து முழுவதுமாக எதுவும் தெரியாமல் கட்டுக்கதைகளை கட்டிவிடாதீர்கள். உண்மையான வெர்ஷன் விரைவில் வரப்போகிறது. நாங்கள் மன ரீதியாக மிகவும் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளோம்" என்று கேப்ஷன் இட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் ரியல் வெர்ஷன் எனக் குறிப்பிட்டு விரைவில் வரவுள்ளது எனத் தெரிவித்துள்ளதால், ரசிகர்கள் பலரும் நீங்கள் கர்ப்பமாக இருக்குறீர்களா எனக் கேட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X