Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தொகுப்பாளருக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு போட்டியாளர்களுக்கு கிள்ளிக் கொடுக்கும் பிக் பாஸ்
மும்பை:தொகுப்பாளருக்கு மட்டும் அள்ளி, அள்ளி கொடுக்கும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கிள்ளிக் கொடுக்கக் கூட யோசிக்கிறார்.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 13வது சீசன் வரும் செப்டம்பர் மாதம் துவங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்க உள்ளார். கடந்த சீசனை விட இந்த சீசனில் சல்மான் கானுக்கு கூடுதல் சம்பளமாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான் கானுக்கு வாரத்திற்கு ரூ. 31 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. ஆக, இந்த சீசன் முடியும்போது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மட்டும் சல்மானுக்கு ரூ. 403 கோடி கிடைக்கும்.
இது ஒரு புறம் இருக்க பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே, ராஜ்பால் யாதவ், நடிகைகள் ஜரீன் கான், முக்தா கோட்சே, டிவி நடிகை தேவோலீனா பட்டாச்சார்ஜி, பாடகரும், நடிகருமான ஆதித்யா நாராயண், மாடல் மஹிகா சர்மா ஆகியோர் பிக் பாஸ் 13 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துள்ளனர். காரணம் சம்பளம்.
இதற்குத் தான் இலங்கையில் இருந்து கிளம்பி வந்தீங்களா லாஸ்லியா?
இது குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் விபரம் அறிந்த ஒருவர் கூறியதாவது,
5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேனலுக்கும், பிரபலங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. தாங்கள் கேட்ட சம்பளத்தை கொடுக்க சேனல் சம்மதிக்காததால் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்கள்.
சங்கி பாண்டே, ராஜ்பால் யாதவ், ஜரீன் கான் ஆகியோர் வாரத்திற்கு ரூ. 1 லட்சம் சம்பளம் கேட்டார்கள். ஆனால் ரூ. 50 ஆயிரம் தான் கொடுப்போம் என்றது சேனல். டிவி பிரபலம் தேவோலீனா, அங்கிதா ஆகியோர் ரூ. 80 ஆயிரத்திற்கும் மேல் வேண்டும் என்று கேட்டார்கள். டிவி சேனல் வாரம் ரூ. 30 ஆயிரம் மட்டுமே தருவோம் என்றது. சர்ச்சைக்கு பெயர் போன மஹிகா சர்மா பெரிய தொகையை சம்பளமாக கேட்டார் என்றார்.
சம்பள விஷயம் காரணமாக ஆதித்யா நாராயணும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துள்ளார்.