3வது திருமணம் செய்து கொள்ளப் போகிறேனா.. டிவிட்டரில் பிக் பாஸ் பிரபலம் விளக்கம்!

தன்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என நடிகை ரேஷ்மா கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை: தனது மூன்றாவது திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை ரேஷ்மா.

நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி முறை நடிகை ரேஷ்மா. சீரியலில் அறிமுகமான போதும், தற்போது தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த நடிகையாக வலம் வருகிறார். பிக் பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமாகி விட்டார் ரேஷ்மா.

Bigg Boss Reshma explains about marriage rumour

அந்நிகழ்ச்சியில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த சோகங்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டார். இதனால் அவர் மீது ரசிகர்களுக்கு அனுதாபம் ஏற்பட்டது. சமூகவலைதளப் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிட்டு வரும் ரேஷ்மாவை அதிகம் பேர் பின் தொடர்கின்றனர்.

அந்தவகையில் சமீபத்தில் அவர் பதிவிட்ட புகைப்படம் ஒன்று வைரலானது. அதில், ஆண் நண்பருடன் நின்றிருக்கும் ரேஷ்மா, வாழ்க்கை தத்துவம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இதனால் அவரைத் தான் ரேஷ்மா மூன்றாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் பரவியது. அந்த புகைப்படமும் வைரலானது.

ஆனால் அது உண்மையில்லை என தற்போது ரேஷ்மா விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வரும் செய்திகளில் உண்மையில்லை. அவை வெறும் ஊகங்களே. என்னைப் பற்றிய தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்" என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X