3வது திருமணத்திற்கு தயாரான பிக் பாஸ் நடிகை.. மாப்பிள்ளை இவர்தான்.. புகைப்படத்துடன் வைரலாகும் செய்தி!

நடிகை பிக் பாஸ் ரேஷ்மா 3வது முறையாக திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

நான் 22 கல்யாணம் பண்ணிருக்கேன்| BIGG BOSS 3 RESHMA | V CONNECT | FILMIBEAT TAMIL

சென்னை: பிக் பாஸ் ரேஷ்மா மறுமணம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

சன் டிவி-யில் ஒளிபரப்பான 'வம்சம்' சீரியலில் நடிகையாக அறிமுகமானவர் ரேஷ்மா பசுபலேட்டி. ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். பிறகு, 'மசாலா படம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு 'கோ 2'-ல் செய்தி தொகுப்பாளராகவும், 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்கரன்' படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்திலும் நடித்தார்.

அப்படத்தில் புஷ்பா புருஷன் என்ற காமெடி மூலம் பிரபலமான ரேஷ்மாவுக்கு பிக் பாஸ் சீசன் 3 நல்ல அடையாளத்தைப் பெற்றுத் தந்தது.

பிக் பாஸ் சீசன் 3

பிக் பாஸ் சீசன் 3

அந்த நிகழ்ச்சியில் அவர் தனது சொந்த வாழ்க்கையில் தான் அனுபவித்த துயரங்கள் பற்றி அவர் பேசியது உருக்கமாக இருந்தது. பெற்றோர் பார்த்து வைத்த முதல் திருமணம் தோல்வியில் முடிந்தது, அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட திருமணமும் விவாகரத்தில் முடிந்தது பற்றி அவர் விரிவாகப் பேசியிருந்தார்.

நடுநிலையாளர்

நடுநிலையாளர்

அதோடு தனது குழந்தைகள் பற்றி அவர் பேசியதும், முகெனைத் தன் மகனாகப் பாவித்து அவர் நடந்து கொண்ட விதமும் மக்கள் மனதில் அவருக்கான இடத்தைப் பிடித்துக் கொடுத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைகள் எதிலும் சிக்காமல் நடுநிலையாளராக இருந்ததும் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

புதிய புகைப்படம்

புதிய புகைப்படம்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தற்போது சில படங்களில் ரேஷ்மா நடித்து வருகிறார். அவ்வபோது தன் புகைப்படங்களையும் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்த புகைப்படம் ஒன்றில், இளைஞர் ஒருவருடன் ரேஷ்மா நின்று கொண்டிருந்தார்.

மூன்றாவது திருமணம்

கூடவே அதில், "வாழ்க்கை மிகவும் குறுகியது. உங்களை சிரிக்க வைக்கும்,நேசிக்கும் நபர்களுடன் அதை செலவிடுங்கள்" என ரேஷ்மா தெரிவித்திருந்தார். இதனால் ரேஷ்மா அந்தப் புகைப்படத்தில் இருக்கும் நபரைத் தான் மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக ஒரு செய்தி வைரலாகியுள்ளது.

யோகி பாபுவுடன் திருமணம்

யோகி பாபுவுடன் திருமணம்

இந்தத் தகவல் எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. ரேஷ்மா அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே இது பற்றி தெரியவரும். ஏனென்றால் இதற்கு முன்னர் யோகி பாபுவை ரேஷ்மா திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஒரு தகவல் வைரலானது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X