ரச்சிதாவோட மாஜி கணவர் ஆம்பள இல்லையா?.. ஜோவிகா சொன்ன வார்த்தையை கொளுத்திப் போட்ட பிக் பாஸ்!

சென்னை: சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து அனைவரையும் கவர்ந்த ரச்சிதா தனது கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அவர் ஆம்பளையா என ஜோவிகா கேட்ட கேள்வியை பிக்பாஸ் கொளுத்திப் போட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ரொம்பவே டல் அடித்து வந்த நிலையில், சர்ச்சைகளைக் கிளப்பி மொத்த ரசிகர்களையும் மீண்டும் அதனைப் பார்க்க விஜய் டிவி செய்த தரமான சம்பவம்தான் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பியது.
நிகழ்ச்சி சுவாரசியம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்த ரசிகர்கள் எல்லாம் பிரதீப் ஆண்டனி வெளியே போயிட்டார் இனிமேல் பிக்பாஸை பார்க்க மாட்டேன் என சொன்னவர்கள் எல்லாம் தற்போது சூடு பிடித்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியை 24 மணி நேரமும் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

Bigg Boss reveals what Jovika talks about Dinesh masculinity in front of everyone

மாயாவின் அலப்பறை: விக்ரம் மற்றும் லியோ படத்தில் நடித்த நடிகை மாயா இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ள நிலையில், அவருக்கு டைட்டில் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கடந்த சீசனில் டைட்டில் வென்ற அசிம் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். மாயாவின் ஸ்ட்ராடஜி தான் பிரதீப் வெளியே அனுப்பியது என்றும் மாயாவை சீக்கிரம் வெளியே அனுப்ப வேண்டும் என பிரதிப் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வரும் நிலையில் ஜோவிகாவின் ஆட்டமும் மீண்டும் கிக் ஸ்டார்ட் ஆகியுள்ளது.

ஆம்பளை இல்லைன்னு சொன்ன ஜோவிகா: ரச்சிதாவின் கணவர் தினேஷ் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ள நிலையில், ஒரு ஆம்பளையா என சந்தேகமாக இருப்பதாக ஜோவிகா பேசியதை அப்படியே போர்டில் வெளியிட்டு அனைத்து ஹவுஸ் மேட்டுகளுக்கும் அம்பலப்படுத்தி ஜோவிகாவை வசமாக சிக்க வைத்துள்ளார் பிக்பாஸ். அந்த காட்சிகள் அடங்கிய இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பெண்கள் பலர் ரெட் கார்டு கொடுக்கும்போது தினேஷ் ஏதும் செய்யாததால் அப்படி சொன்னேன் என ஜோவிகா ரொம்ப கேஷுவலாக விளக்கம் அளிக்கும் காட்சிகளும் தினேஷ் கடுப்பாகும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. 24/7 மணி நேர ஷோவில் இருவருக்கும் இடையே பலத்த சண்டையே வெடித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X