தயங்கிய சாய் பல்லவி.. டக்குன்னு ஓகே சொல்லி கமிட் ஆன ரித்விகா!

சென்னை : வெகு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தனது யதார்த்தமான நடிப்பால் திறமையான நடிகை என பெயர் வாங்கியவர் நடிகை ரித்விகா. பரதேசி, மெட்ராஸ், ஒரு நாள் ஒரு கூத்து, கபாலி, இரண்டாம் உலகின் கடைசி குண்டு போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை நிரூபித்துள்ளார்.

Bigg Boss Riythvika signed in place of Sai Pallavi for exciting new movie

விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 ல் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு பலரின் மனதிலும் நம்ம வீட்டு பொண்ணு என்னும் அளவிற்கு இடம்பிடித்தார் ரித்விகா. அந்த நிகழ்ச்சியில் இவர் டைட்டில் வென்றதை அனைவரும் கொண்டாடினர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது புகழ் அதிகரித்து விட்டதால், அதன் பிறகு தனக்கான கேரக்டர்களை மிக கவனமாக தேர்வு செய்ய துவங்கினார் ரித்விகா. இப்போது கொரோனா மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் பல படங்களில் ரித்விகா கையெழுத்திட்டிருப்பார்.

காமெடி நடிகர் காளி வெங்கட் ஹீரோவாக அறிமகமாகும் படத்தில் ரித்விகா நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. ஆனால் காளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்க முதலில் சாய் பல்லவியிடம் தான் கேட்டுள்ளனர். கொரோனா லாக்டவுன் காரணமாக அவர் இந்த படத்தில் நடிக்க தயக்கம் காட்டி உள்ளார்.

இதனால் புதுமுக இயக்குனரான பிரம்மா, சாய் பல்லவியை நடிக்க வைக்கும் முடிவை கைவிட்டாராம். சாய் பல்லவிக்காக எழுதப்பட்ட கேரக்டரில் தான் ரித்விகா நடிக்க போகிறாராம். மாடு என பெயரிடப்பட்டுள்ள இந்த படம், லாக்டவுன் முடிந்ததும் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது.

அமலா பாலை வைத்து ஆடை படத்தை தயாரித்த விஜி சுப்ரமணியம் தான் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளார். படத்தின் பூஜை, படப்பிடிப்பு துவங்கும் நாள் போன்றவை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X