கேப்டன் ஆனதுக்கு வேல்ஸ் நிறுவனம் விளம்பரம்லாம் பண்ணாங்க.. ஆனால் உள்ளே வருணை வச்சி செய்றாரே பிக்பாஸ்
சென்னை: ராஜு ஜெயமோகனை போராடி வீழ்த்தி 3 கோல்களை போட்டு மீண்டும் பிக் பாஸ் வீட்டு கேப்டனாக சிபி மாற போராடிய நிலையில், தன்னிடம் இருக்கும் காயினை பயன்படுத்தி இந்த வாரம் நோகாமல் தலைவர் ஆகி விட்டார் வருண்.
வேல்ஸ் நிறுவன தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மருமகனான வருண் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டனான நிலையில், வேல்ஸ் நிறுவனம் வாழ்த்திப் போட்ட போஸ்டர் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், கேப்டனான வருணை இந்த வாரம் வச்சு செய்வது என்கிற முடிவில் அடுத்தடுத்து பனிஷ்மென்ட் கொடுத்து வருகிறார் பிக் பாஸ்.

இந்த வார கேப்டன்
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் 4வது வார கேப்டனாக வருண் பஞ்ச தந்திர காயினை பயன்படுத்தி மாறி உள்ளார். கேப்டன் பதவிக்கு இந்த வாரம் சிபி மற்றும் ராஜு ஜெயமோகன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இருவருக்கும் இடையே சேறு ஃபுட்பால் போட்டி நடத்தப்பட்டது. அதில் 3 கோல்களை அடித்து தலைவரான சிபியிடம் இருந்து அந்த கேப்டன் பதவியை வருண் பிடுங்கி கொண்டார்.

எவிக்ஷன் பயம்
கடந்த வாரம் சின்ன பொண்ணு வெளியேறிய நிலையில், வருண் மற்றும் அபிநய் தான் கடைசியில் நின்று இருந்தனர். அப்போதே கமல் சார் இருவருக்கும் அடுத்த வாரம் கொஞ்சமாவது விளையாடினால் தான் பிக் பாஸ் வீட்டில் நீடிக்க முடியும் என்கிற அட்வைஸை கொடுத்து விட்டார். இந்த வாரம் எப்படியோ நாம் எவிக்ஷன் ஆகி விடக் கூடாது என்பதற்காகவே வருண் கேப்டனாக மாறினார்.

வேல்ஸ் விளம்பரம்
இது வரை இருக்கும் இடமே இல்லாமல் இருந்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக வருண் மாறியுள்ள நிலையில், பகிரங்கமாக தங்களது ஆதரவை வேல்ஸ் நிறுவனம் போஸ்டர் அடித்து வாழ்த்தி கேப்டன் வருணுக்கு தெரிவித்துள்ளதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் ஆடிப் போய் விட்டனர். தனியா பி.ஆர். டீம்லாம் தேவை இல்லை. புரொடக்ஷன் கம்பெனியே வருண் பின்னாடி இருக்கு என கிண்டல் அடித்து வருகின்றனர்.

பாத்ரூம் க்ளீன் பண்ணனும்
கேப்டனாக கெத்தாக இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை ஆட்சி செய்யலாம் என நினைத்த வருணுக்கு முதல் அடியாக அடுத்த அறிவிப்பு வரும் வரை பாத்ரூம் ஏரியாவை தனியாளாக க்ளீன் பண்ணனும் என பனிஷ்மெண்ட் கொடுத்தார் பிக் பாஸ். சோனமுத்தா ஆரம்பத்துலே போச்சா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

புது பவர்
போன வாரம் இசைவாணி மற்றும் மதுமிதாவுக்காக எந்தவொரு அதிகாரத்தையும் வெளிப்படையாக பிக் பாஸ் கொடுக்காமல் ஓரவஞ்சனை செய்த நிலையில், இந்த வாரம் நிரூப்புக்கு தனி பவர், வருணுக்கு தனி பவர் என சும்மா பிரித்து பிரித்து கொடுத்து வருகிறார். யாராவது தப்பு செஞ்சா கார்டன் ஏரியாவில் தோப்புக் கரணம் போடணும் என்றும் அதில் ஒரு ட்விஸ்ட் வைத்து விட்டார் பிக் பாஸ்.

தண்டனை கொடுத்த பிக் பாஸ்
கேப்டனாக புதிய பவர் எல்லாம் கிடைத்தும் இன்னமும் அக்ஷராவுடன் இணைந்து அடுத்த காயினை எப்படி திருடலாம் என திட்டம் தீட்டிக் கொண்டிருந்த வருண் "சாரி பிக் பாஸ்" என கார்டன் ஏரியாவில் ஒரு முறையும் நிரூப் மைக் மாட்டாததற்காக இன்னொரு முறையும் தோப்புக் கரணம் போட்டார் வருண். இந்த வாரம் வருணை சும்மா வெயிட்டா வச்சு செய்யப்போறாரு பிக் பாஸ்.


Click it and Unblock the Notifications











