Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தனலட்சுமி விஷப்பாம்பு..ரச்சிதா பற்றி எதுவும் கேட்காதீங்க..பேட்டியில் மனம் திறந்த ராபர்ட் மாஸ்டர்!
சென்னை : பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் போட்டியாளர்கள் குறித்து புட்டு புட்டு வைத்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்பட்டு, தற்போது 14 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
அசீம்
அமுதவாணனை
அடித்தாரா?
பிக்
பாஸ்
வீட்டில்
நடந்தது
என்ன?

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், பிடித்த போட்டியாளரான இருந்தவர் ராபர்ட் மாஸ்டர். அனைத்து போட்டியாளர்களையும் டார்லிங் ...டார்லிங் என்று அழைத்து போட்டியாளர்களின் மனதில் இடம் பிடித்தார். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததுமே ரச்சித்தாவிற்கு ரூட்டுவிட்ட ராபர்ட் மாஸ்டர், அவரின் பின்னாலே சுற்றிக்கொண்டிருந்தார்.

வருத்தப்பட்ட ரசிகர்கள்
கடந்த வாரம் ஓப்பன் நாமினேஷனில் சிக்கிய ராபர்ட் மாஸ்டர் குறைந்த வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். ராபர்ட் மாஸ்டர் மிகவும் ஸ்ட்ராங்கான போட்டியாளர் என கருதிய ரசிகர்களுக்கு, அவர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல், ரச்சித்தாவின் பின்னால் சுற்றி கெடுத்துக்கொண்டார் என ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.

தனலட்சுமி விஷபாம்பு
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த ராபர்ட் மாஸ்டர் அளித்துள்ள பேட்டியில், எப்படியோ நரி கூட்டத்திலிருந்து வெளியே வந்துவிட்டேன் என்றார். அந்த வகையில் ஒவ்வொரு போட்டியாளர்களையும் மிருகங்களுடன் ஒப்பிட்டு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு மிகவும் சுவாரசியமாக பதில் அளித்தார் ராபர்ட் மாஸ்டர். விஷம் உள்ள பாம்பு தனலட்சுமி, விஷம் இல்லாத பாம்பு ஷிவின், கழுகு அசிம், புலி மணி, யானை ஜனனி, முயல் ஏடிகே, முதலை விக்ரம், சிங்கம் போல வீட்டில் யாரும் இல்லை, கமல் சார் மட்டும் தான் சிங்கம் என்றார்.

கேட்காதீங்க ப்ளீஸ்
மேலும், ரச்சித்தாவை என்ன என்று சொல்லவில்லையே என செய்தியாளர்கள் கேட்க, அவங்களை பத்தி கேட்காதீங்க ப்ளீஸ் என்றார். பிடித்த போட்டியாளர்கள் அமுதவாணன், ரச்சித்தா, ஷிவின் என்றார். பிடிக்காதவர்கள் அசீம், தனலட்சுமி, ஜனனி அவங்ககிட்ட நான் தள்ளியே இருப்பேன் என்றார். திங்கள் முதல் வியாழன் வரை வீட்டில் ஒரே சண்டையாக இருக்கும், ஆனால் வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அனைவரும் அப்படியே அமைதியாகி விடுவார்கள் என்றார்.