அடடா.. அதிரிபுதிரி கவர்ச்சிக்கு மாறிய சாக்ஷி அகர்வால்… கிண்டலடித்த நெட்டிசன்ஸ் !
சென்னை : முன்னணி நடிகைகளே என்னடா இது ரொம்ப ஓவரால இருக்கும் என்று கூறும் அளவுக்கு கவர்ச்சியில் அதிரிபுதிரி செய்து வருகிறார் சாக்ஷி அகர்வால்.
ராஜா ராணி, விஸ்வாசம், காலா போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சாக்ஷி அகர்வால்.
இவர் தற்போது, ராய் லட்சுமியின் சிண்ட்ரெல்லா படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

துணைநடிகையாக
சாக்ஷி அகர்வால் ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு காமெடி காட்சியில் நடித்திருப்பார். அதே போல விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் தோழிகளில் ஒருவராகவும், காலா திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாகவும் நடித்திருப்பார் சாக்ஷி.

பிரபலமானார்
சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மூலம் பிரபலமானார். அந்த வீட்டில் எப்போதும், மேக்கபுடனும், குட்டி டவுசருடன் வலம் வந்த இவரை பார்க்கவே தனி ரசிகர் கூட்டம் கூடியது.

ஓவர் கிளாமர்
இதையடுத்து , கிடைத்த ரசிகர் கூட்டத்தை தங்கவைத்துக்கொள்ள இவர் இணையத்தில் தினமும் அதிரிபுதிரி செய்து வருகிறார். உடற்பயிற்சி செய்யும் வீடியோ, கவர்ச்சி புகைப்படம் என்று ஏகப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். முன்னணி நடிகைககளே வாயை பிளக்கும் அளவுக்கு ஓவர் கிளாமராக காட்சி அளிக்கிறார் சாக்ஷி அகர்வால்.

நல்லதானே இருந்தார்
தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தொடை தெரியும் படி க்யூட்டாக நடமாடிக்கொண்டு இருந்த இவர், திடீரென வேற மாதிரி ஆடுகிறார். இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்தாலும், பலர் அட பைத்தியமே இவ்வளவு நாள் நல்லத்தானே இருந்த என்று கேட்டு அவரை கிண்டலடித்து வருகின்றனர்.
Recommended Video

தி நைட்
நடிகை சாக்ஷி அகர்வால், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ளன. மேலும், த நைட் என்ற திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











