ஒற்றை கையில் சிலம்பம் சுற்றும் பிக்பாஸ் நடிகை.. வைரலாகும் வீடியோ !

சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் சிலம்பம் சுற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Recommended Video

Cinema Square: இன்றைய சினிமா செய்திகள்

தமிழ் பிக்பாஸ் சீசன்3 மூலமாக பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று பிரபலமடைந்த இவர் பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

 Bigg boss Sakshis silambam video

அட்லி இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ராஜா ராணியில் ஆர்யா மற்றும் சந்தானம் வில்லன் தீனாவிடம் பேசும் ஒரு நகைச்சுவை காட்சி அனைவருக்கும் நினைவில் இருக்கும் அந்த காட்சியில் சந்தானம் பேசும் வசனம் வரும் போது ஒரு பெண் அமர்ந்து இருப்பார் அது தான் சாக்ஷி அகர்வால். பார்க்கும் போது அடையாளம் தெரியாதவர் போல இருப்பார்.

 Bigg boss Sakshis silambam video

இதன் பின் பல படங்களில் நடித்தார் சாக்ஷி விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் படத்தில் கவிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக வருவார். இதனை அடுத்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவுடன் தோழிகளில் ஒருவராக வருவார்.

 Bigg boss Sakshis silambam video

இந்த படத்திற்கு அடுத்து பிக்பாஸில் கலந்து கொண்டார் இதில் அவருக்கு தமிழ் ரசிகர்களிடயே ஒரு நல்ல மார்கெட்டை ஏற்படுத்தியது இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. பிக்பாஸ்யை தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புக்கள் குவிந்தது. ராய் லட்சுமி நடிக்கும் சிண்ட்ரெல்லா, ஜி. வி பிரகாஷ் நடிக்கும் ஆயிரம் ஜென்மங்கள், ஆர்யாவின் டெடி போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

 Bigg boss Sakshis silambam video

தற்போது சாக்ஷி அகர்வால், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை மிகவும் ஆர்வமுடன் கற்று வருகிறார். ஒத்த கையில் சிலம்பத்தை வைத்து சுற்றும் அந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சிக்குள்ளாகினர். பலர் அவரை பாராட்டி வருகின்றனர். அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X