அட அடிக்குது அதிர்ஷ்டக் காற்று.. பிரபல பிக் பாஸ் நடிகைக்கு கிடைத்த இன்னொரு சினிமா வாய்ப்பு!

By

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகைக்கு மேலும் ஒரு பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

இன்னும் சில நாட்களில் முடியப் போகும் இந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா கார்த்திக்.

சந்திரகுமாரி

சந்திரகுமாரி

மாடலிங் மற்றும் டிவி சீரியல் நடிகை. இவர் ராதிகா நடித்து வந்த சந்திரகுமாரி நாடகத்தில் இளவரசி ருத்ரா வேடத்தில் நடித்து வந்தார். மிஸ் சென்னை பட்டம் வென்றவரான சம்யுக்தா ஏற்கெனவே சில மலையாள படங்களில் நடித்துள்ளார். திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது.

துக்ளக் தர்பார்

துக்ளக் தர்பார்

ஃபிட்னஸ் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் சம்யுக்தா கார்த்திக். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வருவது வழக்கமானதுதான். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன், விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தில் நடிக்கும் வாய்ப்பு, சக்யுக்தா கார்த்திக்கிற்கு கிடைத்திருந்தது.

ராஷி கண்ணா

ராஷி கண்ணா

இதுபற்றி அறிவிப்பு வெளியாகி இருந்தது. அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் இந்தப் படத்தில் ராஷி கண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். பார்த்திபன், மஞ்சிமா மோகன், கருணாகரன் உட்பட பலர் நடித்து வருகின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

கவுதம் கார்த்திக்

கவுதம் கார்த்திக்

கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். லலித்குமார் தயாரித்து வருகிறார். இந்நிலையில் சக்யுக்தாவுக்கு மேலும் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார்.

ஹீரோயின் ஶ்ரீதிவ்யா

ஹீரோயின் ஶ்ரீதிவ்யா

பாசிட்டிவ் பிரின்ட் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஹீரோயினாக ஶ்ரீதிவ்யா நடிக்கிறார். மூன்று வருடத்துக்குப் பிறகு அவர் தமிழில் மீண்டும் நடிக்கிறார். அவர் இதற்கு முன் சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தில் நடித்திருந்தார். இதில் அவர் பிசியோதெரபிஸ்டாக நடிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X