ஒரு வேளை சாப்பாடு இவ்வளவு காஸ்ட்லியா ? இதெல்லாம் டூ மச்.. சம்யுக்தாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ் !
சென்னை :பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சம்யுக்தா இவர் மாடலிங் மற்றும் டிவி சீரியல் நடிகை ஆவார்.
இவர் ராதிகா நடித்து வந்த சந்திரகுமாரி நாடகத்தில் இளவரசி ருத்ரா வேடத்தில் நடித்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தையும் உண்டு.
சம்யுக்தா கார்த்திக், தனது யூடியூப் தளத்தில், 5000 Rupees for lunch என்ற வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்தவர்கள் வாயடைத்து போய் விட்டார்கள்.

பிக் பாஸ் சீசன் 4
கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்ட சம்யுக்தாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உருவானது. பிக் பாஸிற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.

யூடியூப் சேனல்
பிரபலமாகி விட்டோம் இனி என்ன கவலை, அடுத்து யூடியூப் சேனல் தொடங்கினால் போதும் என்று நினைத்த சம்யுக்தா, தனது பெயரில் ஒரு சேனலை தொடங்கினார்.அதில், குக்கிங் , மேக்கப், டிராவல், வீடு, கார் என அனைத்தையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

ஃபுட் வீடியோ
இந்நிலையில், சம்யுக்தா ஃபுட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோதான் தற்போது அவரது ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஹோட்டல் தனக்கு மிகவும் பிடித்தமான ஹோட்டல் என்றும், அடிக்கடி இங்கு வந்து வகை வகையான உணவை ரசித்து ருசித்து சாப்பிடுவேன் என்றும் கூறினார்.

ரூ5.500 பில்
மேலும் , ஹோட்டலின் தோற்றம் மற்றும் அழகு குறித்து வர்ணித்தும் அந்த வீடியோவில் பேசி உள்ளார். இதையடுத்து, பட்டர் நான் அதற்கு சைடு டிஷ்ஷாக பன்னீர் பட்டர் மசாலாவும், பிறகு மட்டன் பிரியாணியும் சாப்பிட்டுள்ளார். கடைசியாக டெசர்ட் சாப்பிட்டுவிட்டு மதிய உணவை முடித்துக்கொண்ட சம்யுக்தா, இதற்கு 5,500 ரூபாய் பில் வந்து இருக்குனு கூலா கூறிவிட்டு, அடுத்த வீடியோவில் பார்க்கலாம் என சென்றுவிட்டார்.
Recommended Video

ரொம்ப டூமச்
இந்த வீடியோவை பார்த்தவர்கள் ஒரு வேளை மதிய உணவுக்கு 5 ஆயிரம் ரூபாயா என்றும், என்ன தான் பணம் இருந்தாலும் ஒரு வேளை சாப்பாட்டுக்கு 5.500 ரொம்ப டூமச் என்றும், இந்த பணத்தை ரோட்டில் சாப்பாடு இல்லாமல் தவிப்பவர்களுக்கு ஒருவேளை உணவு வழங்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றும், ஒரு சிலர், எங்களுடைய மாத சம்பளமே ரூ. 5000 தான் , பல் இருக்குறவன் பக்கோடோ சாப்பிடுறான்" என்று பலவகையான நெகட்டிவ் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











