விஜய்சேதுபதியை தொடர்ந்து சசிகுமார் படத்தில் இணைந்த பிக் பாஸ் சம்யுக்தா.. பூஜையும் போட்டாச்சு!

சென்னை: நடிகர் சசிகுமாரின் புதிய படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த படத்தில் பிக் பாஸ் புகழ் சம்யுக்தாவும் இணைந்துள்ளார். நடிகர் விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தில் நடித்துள்ள சம்யுக்தா அடுத்ததாக சசிகுமார் படத்தில் இணைந்துள்ளார்.

அறிமுக இயக்குநர் ஹேமந்த் குமார் இந்த படத்தை இயக்குகிறார். இமான் இசையமைக்கிறார்.

சசிகுமாரின் புதுப்படம்

சசிகுமாரின் புதுப்படம்

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் சசிகுமார் நடிக்க உள்ள புதிய படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஹேமந்த் குமார் இயக்க உள்ளார். இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

அதிரடி ஆக்‌ஷன்

அதிரடி ஆக்‌ஷன்

இந்த படத்தில் ஸ்டன்ட் இரட்டையர்களான அன்பறிவு மாஸ்டர்கள் இருப்பதால் வேற லெவலில் ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒரு கிராமத்து அதிரடி ஆக்‌ஷன் திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

சம்யுக்தா இருக்காரு

சம்யுக்தா இருக்காரு

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை சம்யுக்தாவும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பட பூஜையில் சம்யுக்தாவும் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. பிக் பாஸ் முடிந்த கையோடு விஜய்சேதுபதி படத்தில் நடிக்கும் வாய்ப்பு சம்யுக்தாவுக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

பெரிய லிஸ்ட்

பெரிய லிஸ்ட்

நடிகர் சசி குமார் குட்டி விஜய்சேதுபதியாகவே மாறி ஏகப்பட்ட படங்களில் நடித்து தள்ளி வருகிறார். அரை டஜன் படங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், புதிய படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். எம்ஜிஆர் மகன், கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், பகைவனுக்கு அருள்வாய் என பெரிய லிஸ்டே இருக்கு!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X