நயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்!
சென்னை: பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் சம்யுக்தா செம அழகாக ஆடியதை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் வாய் பிளந்து பாராட்டி வருகின்றனர்.
கடந்த அக்டோபர் 4ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி 2020ல் ஆரம்பித்து 2021ம் ஆண்டு தொடக்கத்தில் கடந்த ஜனவரி 17ம் தேதி கிராண்ட் ஃபினாலேவுடன் முடிவுக்கு வந்தது.
கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் அர்ச்சனா மற்றும் சம்யுக்தா மட்டுமே நடனமாடியது குறிப்பிடத்தக்கது.

கிராண்ட் ஃபினாலே கொண்டாட்டம்
பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே 6 ,மணி நேர கோலாகல கொண்டாட்டமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணியையும் தாண்டி சென்றது. ஏகப்பட்ட சர்ப்ரைஸ்களுடன் ஆரி டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். பாலாஜி முருகதாஸ் ரன்னர் அப் ஆனார். சோம், ரம்யா மற்றும் ரியோ கிராண்ட் ஃபினாலே அன்று கடைசியாக எவிக்ட் ஆனார்கள்.

அர்ச்சனாவின் ஆட்டம்
பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் ஆஜீத்தும் சுசித்ரா, வேல்முருகன் பாட்டுப்பாடி அசத்தினர். அர்ச்சனா அட்டகாசமாக புதுப்பட பாடல்களுக்கு சும்மா தெறிக்கவிடும் ஆட்டத்தை போட்டு அரங்கத்தையும் பிக் பாஸ் பார்வையாளர்களையும் குஷிப்படுத்தினார். வேற லெவல் எனர்ஜி அவரது ஆட்டத்தில் இருந்தது.

சரஸ்வதி தேவியாய்
அர்ச்சனாவை தொடர்ந்து சம்யுக்தாவின் டான்ஸ் பர்ஃபாமன்ஸ் இருந்தது. வெள்ளை நிற உடையில் அப்படியே சரஸ்வதி தேவி போலவே காட்சி தந்தார் சம்யுக்தா. ஆயுத பூஜையை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில் லக்ஷ்மியாக நடித்திருந்த சம்யுக்தா கிராண்ட் ஃபினாலேவில் கலைவாணியாகவே காட்சி தந்தார்.

நயன்தாராவுக்கு ரெஸ்ட்
சம்யுக்தாவின் அசத்தல் நடனத்தை பார்த்த ரசிகர்கள், புது அம்மன் ரெடியாகிட்டாங்க.. நயன்தாரா மேடமுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாமா? என சம்யுக்தா டான்ஸ் ஆடிய போட்டோக்களை போட்டு அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சம்யுக்தாவும் அந்த ட்வீட்டுக்கு லைக் போட்டுள்ளார்.
Recommended Video

விஜய்சேதுபதி படத்தில்
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பெண் போட்டியாளர்கள் யாருக்கும் இன்னும் புதுப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், சம்யுக்தாவுக்கு மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தில் உடனடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும், பல வாய்ப்புகள் குவிய வாழ்த்துக்கள்!


Click it and Unblock the Notifications











