Bigg Boss Samyuktha: யாரு நம்ம பிக் பாஸ் சம்யுக்தாவா இது? டைட் ஜிம் சூட்டில் சும்மா தெறிக்கவிடுறாரே!
சென்னை: பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட சம்யுக்தா சண்முகநாதனுக்கு ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் செம ஹாட்டான ஜிம் சூட் உடையில் அவர் வெளியிட்ட போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் கன்னா பின்னாவென கமெண்ட் போட்டு வருகின்றனர்.
சென்னை மாடல் அழகியான சம்யுக்தா பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார். எலைட் போட்டியாளர்கள் லிஸ்ட்டில் அவரது சேட்டைகளை ரசிகர்கள் பார்த்து ட்ரோல் செய்யத் தொடங்கினர்.
க்ரிஞ்ச் மேக்ஸ், ஷப்பா முடியல என சம்யுக்தா நிகழ்ச்சியில் சொன்ன வார்த்தைகள் எல்லாம் செம டிரெண்டானது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏகப்பட்ட படங்களில் அவருக்கு நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

விஜய்சேதுபதி முதல் விஜய் வரை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய உடனே விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தில் நடிக்கும் வாய்ப்பு நடிகை சம்யுக்தாவுக்கு கிடைத்தது. கடந்த ஆண்டு இறுதியில் வெளியான காபி வித் காதல் படத்தில் ஸ்ரீகாந்தின் மனைவியாக நடித்திருந்தார்.
இந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடிகர் ஷாமின் மனைவியாக நடித்து தனக்கு கொடுக்கப்பட்ட ரோலை கச்சிதமாக செய்திருந்தார் சம்யுக்தா. மேலும், சசிகுமார் படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியாக: 2017ல் மிஸ் சென்னை பட்டம் பெற்ற சம்யுக்தா மலையாள படத்திலும் சன் டிவி சீரியலிலும் நடித்து வந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 2020ல் கலந்து கொண்டார்.
பிக் பாஸ் பிரபலங்களான யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்சன், ஷிவானி நாராயணன் என பலரும் இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களை பதிவிட்டு வரும் நிலையில், நடிகை சம்யுக்தாவும் சமீப காலமாக இன்ஸ்டாவில் படு கவர்ச்சியாக போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். பாவனா பாலகிருஷ்ணன் உடன் இவர் இணைந்து போட்ட குத்தாட்ட வீடியோக்கள் டிரெண்டான நிலையில், தற்போது சோலோவாக கவர்ச்சி போட்டோக்களை போட்டு பர்ஃபார்ம் செய்து வருகிறார்.

கண்ட மேனிக்கு குவியும் கமெண்ட்ஸ்: பிங்க் நிற ஜிம் சூட்டில் செம ஹாட்டாக சைடு மற்றும் ஃபிரன்ட் போஸ் கொடுத்த சம்யுக்தாவை பார்த்த ரசிகர்கள் ஃபயர் எமோஜிக்களை பறக்கவிட்டு வருகின்றனர்.
வயசானாலும், உங்க ஸ்டைல் மாறாமல் அப்படியே இருக்கிறது என்றும் அவ்ளோ பெரிய குழந்தைக்கு அம்மான்னு சொன்னா நம்பவே மாட்டாங்க, என்ன ஸ்ட்ரக்சர் டா சாமி என கண்ட மேனிக்கு டபுள் மீனிங் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











