கிஃப்ட் கொடுத்து பிரியங்காவை சேவ் செய்த பிக்பாஸ்...குஷியான போட்டியாளர்கள்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் பனிரெண்டாவது வாரத்தில் குடும்ப உறவுகள் வரும் ஃபிரீஸ் டாஸ்க் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த வாரம் வெளியேற போவது யார், காப்பாற்றப்பட போவது யார் என்ற கேள்வி வழக்கம் போல் எழுந்து விட்டது.
Recommended Video
இந்த வாரம் சிபி, நிரூப், பிரியங்கா, அக்ஷரா, வருண், அமீர் ஆகிய 6 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் குறைவான ஓட்டுக்களை பெற்று, யார் வெளியேற போகிறார்கள் என்பதை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நிரூப்பிற்கு கமல் அட்வைஸ்
இந்நிலையில் இன்றைய எபிசோடில் கமல், தாமரையின் கேப்டன்சி எப்படி இருந்தது என மற்றவர்களிடம் கேட்டார். போட்டியாளர்களின் குடும்ப உறவுகள் வந்தது பற்றி பேசினார். பிறகு வழக்கம் போல் நிரூப் - பிரியங்கா இடையே டாஸ்க்கின் போது ஏற்பட்ட மோதல், அப்போது நிரூப் பயன்படுத்திய மிக கடுமையான வார்த்தைகள் பற்றி கேட்டு, அட்வைஸ் வழங்கினார்.

கன்ஃபஷன் ரூமிற்கு அழைத்த கமல்
பிறகு போட்டியாளர்களின் நிறை, குறைகள் தனித்தனியாக பேசப் போவதாக ஒவ்வொருவராக கன்ஃபஷன் ரூமிற்கு அழைத்து, அவர்களை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்கள் செய்யும் தவறு என்ன என்பது பற்றியும் பட்டும் படாமல் பேசி அனுப்பினார்.

உள்ளே வந்த நண்பர்
கமல் பேசி முடித்ததும், ஒரு நண்பர் உள்ளே வந்து பரிசு வழங்க போகிறார் என கூறியதும், இமான் அண்ணாச்சி வர போகிறார் என போட்டியாளர்கள் கூறினர். யார் அந்த சிறப்பு விருந்தினர், எதற்காக வருகிறார், என்ன பரிசு என அனைவரின் மனதிலும் பல கேள்விகள் ஓடினர்.

கிறிஸ்துமஸ் கிஃப்ட்
ஆனால் அதற்குள் சான்டாகிளாஸ் உடையணிந்து வந்த நபர், போட்டியாளர்கள் அனைவருக்கும் கிஃப்ட் வழங்கினார். இது கிறிஸ்துமஸ் கிஃப்ட். இது பலருக்கும் ஆச்சரியத்தை தருவதாக இருக்கும். பிடித்திருக்கிறதா என பாருங்கள் என கமல் கூறியதும், ஏதோ பரிசு பொருள் உள்ளது போல, இந்த வாரம் காப்பாற்றப்பட்டது யார் என்பதை சொல்ல கமல் மறந்து விட்டாரா என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.

கிஃப்ட்டில் பிரியங்கா சேவ்ட்
கிஃப்ட்டை பிரித்து பார்த்த நிரூப், சாக்லேட் என கத்தினார். மற்றவர்கள் பிரிப்பதற்குள் பிரியங்கா கிஃப்ட்டை பிரித்து, பிரியங்கா சேவ்ட் என்ற அட்டையை காட்டினார். இன்ப அதிர்ச்சியுடன் பிக்பாஸ் மற்றும் கமலுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











