பிக் பாஸ் டைட்டில் வின்னர் மாரடைப்பு காரணமாக திடீர் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்
மும்பை: பிக் பாஸ் சீசன் 13 டைட்டில் வின்னரான நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 40.
Recommended Video
டிவி தொடர்களில் நடித்து வந்த சித்தார்த் சுக்லா தொடர்ந்து பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார்.
சில பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ள சித்தார்த் சுக்லாவின் திடீர் மரணம் ஒட்டுமொத்த பாலிவுட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சித்தார்த் சுக்லா மரணம்
பிக் பாஸ் இந்தி சீசன் 13ல் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை வென்ற பிரபல டிவி நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் இறந்த செய்தியை மருத்துவமனை உறுதி செய்துள்ளது.

டைட்டில் வின்னர்
பாலிகா வது, தில் சே திலக், ஃபியர் ஃபேக்டர் உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களில் நடித்து பிரபலமான சித்தார்த் சுக்லா, கடந்த பிக் பாஸ் சீசன் 13ல் கலந்து கொண்டு டைட்டில் வென்றார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிக் பாஸ் டைட்டிலை வென்ற சித்தார்த் சுக்லாவுக்கு ஏகப்பட்ட பாலிவுட் வாய்ப்புகள் வரிசை கட்டின.

ரூமர் காதலியுடன்
சமீபத்தில் பிக் பாஸ் ஒடிடி நிகழ்ச்சி மற்றும் டான்ஸ் தீவானே 3 உள்ளிட்ட ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் தனது ரூமர் காதலி மற்றும் பிக் பாஸ் போட்டியாளரான ஷெனாஸ் கில் உடன் கலந்து கொண்ட சித்தார்த் சுக்லா திடீரென இப்படி இறந்து போவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

ரஜினி பிறந்தநாளில்
1980ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி (ரஜினி பிறந்தநாள்) மும்பையில் பிறந்த சித்தார்த் சுக்லா புனித சேவியர் உயர் நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். அதன் பின்னர், ரச்சனா சன்சத் பள்ளியில் இன்டீரியர் டிசைனிங் கோர்ஸை முடித்து விட்டு இந்தி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

பிரபலங்கள் அதிர்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது தான் பாலிவுட் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்த நிலையில், இப்படி திடீரென மாரடைப்பு காரணமாக சித்தார்த் சுக்லா மரணமடைந்ததை அறிந்த பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். #SiddharthShukla ஹாஷ்டேக்கில் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ராஷி கன்னா இரங்கல்
திடீரென சித்தார்த் சுக்லா இறந்து விட்டார் என்கிற செய்தி மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது. அவரது மரணத்தால் வாடும் குடும்பத்தினர் என்ன ஆறுதல் சொல்வேன். சித்தார்த் சுக்லாவின் ஆர்மி மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். வாழ்க்கை இப்படி நிலையற்றதாக இருக்கிறதே என நடிகை ராஷி கன்னா ட்வீட் போட்டுள்ளார்.

சுஷாந்த் மரணம்
கடந்த ஆண்டு இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்த சோகமே இன்னமும் பாலிவுட்டில் சரியாகாத நிலையில், அடுத்த அதிர்ச்சியாக மற்றொரு இளம் நடிகர் உயிரிழந்துள்ளது பேரதிர்ச்சியை கொடுப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











