எல்லாத்தையும் சீக்கிரம் ஆரம்பிச்சுட்டிங்க பிக்பாஸ்! போக போக கன்டென்ட்டுக்கு என்ன செய்வீங்க?!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Day 1 Highlights: முதல் நாள், முதல் காதல், முதல் கேப்டன்,நடந்தது என்ன?- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் அனைத்து கூத்துகளையும் உடனே ஆரம்பித்தது போல் தெரிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியில் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் தொடங்கப்பட்டது. தமிழில் கடந்த 2 சீசன்களும் ஹிட்டடித்ததை தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசன் தொடங்கியுள்ளது.

கடந்த இரண்டு சீசன்களையும் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன்தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நிகழ்ச்சி தொடங்கியிருக்கிறது.

சீனியர்ஸ் ஜூனியர்ஸ்

சீனியர்ஸ் ஜூனியர்ஸ்

இந்த சீசனில் வழக்கம்போல் 15 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். சீனியர்களாக மோகன் வைத்யா, ஃபாத்திமா பாபு, நடிகர் சரணவன், இயக்குநர் சேரனும் பங்கேற்றுள்ளனர்.
இளவட்டங்களாக நடிகை மதுமிதா, சாக்ஷி அகர்வால், லாஸ்லியா, அபிராமி, ஷெரின், ரேஷ்மா, வனிதா, கவின், சாண்டி, முகென், தர்ஷன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

காதல் கதை ஆரம்பம்

காதல் கதை ஆரம்பம்

நேற்று முதல் நாள் எபிசோடு ஒளிபரப்பானது. வழக்கமாக ஒரு வாரத்திற்கு பின்னர்தான், காதல், கண்ணாமூச்சி, அடிதடி, அழுகை என தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி. ஆனால் இம்முறை தொடங்கிய முதல் நாளிலேயே காதல் கதை ஆரம்பமாகிவிட்டது.

முந்திக்கொண்ட அபிராமி

முந்திக்கொண்ட அபிராமி

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று 24 மணி நேரத்திற்குள்ளேயே மாடல் அபிராமிக்கு நடிகர் கவின் மீது காதல் வந்துவிட்டது. கவின் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தபோதே தனக்கு கவின் மீது க்ரஷ் வந்துவிட்டதாக கூறும் அபிராமி, எங்கு போட்டி வந்துவிடுமோ என்று அஞ்சி முன்கூட்டியே சக நண்பிகளிடம் தனது காதல் மேட்டரை லீக் செய்து விட்டார்.

முதல் நாளில் லவ் ட்ராக்

முதல் நாளில் லவ் ட்ராக்

இது நிகழ்ச்சியில் தொடருவதற்கான ஒரு யுத்திதான் என்று ரசிகர்கள் கூறினாலும், பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே கவினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டார். ஆனால் காதலை இன்னும் சொல்லவில்லை. இதனால் நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே ஒரு லவ் ட்ராக் தொடங்கி விட்டது.

அடக்கி வாசிக்கும் ஃபாத்திமா

அடக்கி வாசிக்கும் ஃபாத்திமா

இதேபோல் சீனியர், அட்வைஸ் செய்கிறேன் என்ற பேர்வழி என நேற்று ஆட்டத்தை தொடங்கினார் ஃபாத்திமா பாபு. ஆனால் இயக்குநர் சேரன் கொடுத்த நச் பதிலடியால் பெட்டிப்பாம்பாய் அடங்கி அசந்து போனார். அதன்பிறகு கொஞ்சம் அடக்கிதான் வாசித்தார் ஃபாத்திமா.

சாப்பாட்டுக்கு சண்டை

சாப்பாட்டுக்கு சண்டை

அடுத்தப்படியாக சாப்பாட்டு பிரச்சனை, இன்றைய ப்ரமோவில் காலையில் பொங்கலுக்காக குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. எனக்கு பொங்கல் பிடிக்காது என்கிறார் சாக்ஷி. அவரை பேச விடாமல் வீட்டின் கேப்டனான வனிதா, புடிக்காதா ஒத்துக்காதா என மிரட்டலாக கேட்க என்னை பேசவிடுங்க என நோஸ்கட் செய்கிறார் சாக்ஷி.

கதறிய மோகன் வைத்யா

கதறிய மோகன் வைத்யா

அடுத்து நம்ம மோகன் வைத்யா. 60 வயதான மனுஷர், பாவம் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பே கண்ணீர் விட்டு அழுதார். பார்வையாளர்களையும் கலங்கசெய்தார். இன்றைய ப்ரமோவில் தனக்கு சொல்லி அழக்கூட ஆள் இல்லை எனக்கூறி கதறுகிறார். அவருக்கு சக குடும்பத்தினர் ஆறுதல் கூறுகின்றனர்.

எப்படி ஓட்டுவீங்க பிக்பாஸ்?

எப்படி ஓட்டுவீங்க பிக்பாஸ்?

வழக்கமாக இந்த காட்சிகள் எல்லாம் ஒரிரு வாரங்களுக்கு பிறகுதான் இந்த கூத்துகள் எல்லாம் தொடங்கும். ஆனால் இந்த எபிசோடில் முன்கூட்டியே எல்லாத்தையும் தொடங்கிவிட்டார் பிக்பாஸ். எல்லா கன்டென்ட்டையும் இப்போதே பயன்படுத்திவிட்டால் போக போக நிகழ்ச்சியை எப்படி ஓட்டுவார் பிக்பாஸ்?!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X