நம்பி ஏமாந்து இருக்கேன்..அப்பா இறந்தப்போ உடைஞ்சு போய்டேன்..மனம் திறந்த லாஸ்லியா!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
இலங்கையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து பின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் லாஸ்லியா.

பிக்பாஸ் மூலம் லாஸ்லியாவுக்கு ஓரளவு ரசிகர்கள் உருவாக்கியதால் தற்போது விளம்பரங்கள் மற்றும் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
நடிகை லாஸ்லியா: பிக்பாஸ் வீட்டில் கவின் லொஸ்லியா இருவரும் காதலித்து வந்த நிலையில், வெளியே வந்த பின்பு இருவரின் காதல் பிரேக்அப் ஆகியது. பின்பு ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில், அவை பெரிதாக ஓடவில்லை என்பதால், மறுபடியும் சினிமா வாய்ப்பிற்காக முயற்சி செய்து வருகின்றார்.
உடைந்து போய்விட்டேன்: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள லாஸ்லியா மனம் திறந்து பல விஷயங்கள் குறித்து பேசி உள்ளார். அதில், என் அப்பாவின் மறைவால் நான் மிகவும் உடைந்துவிட்டேன். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தான் அப்பாவை பார்க்க முடிந்தது அவர்கூட இருக்க முடிந்தது, நான் வெளியில் வந்த போது அப்பா கனடா சென்றுவிட்டார். அதன் பிறகு அவர் இறந்துவிட்டார். அவருடன் பேசியதே அந்த பிக் பாஸ் வீட்டில் தான். அவர் இறந்து இரண்டு வருடம் ஆன போதும், இன்னும் என்னால் அதை கடந்து வரமுடியவில்லை.
நம்பி ஏமாந்து இருக்கிறேன்: அதே போல நிறையே பேரை நம்பி நான் ஏமாந்து இருக்கிறேன். அதை எல்லாம் ஒரு பாடமாகத்தான் பார்க்கிறேன். வாழ்க்கையில் ஏமாற்றம் வர வர நம்மை நாம் தயார்ப்படுத்திக்கொள்ள முடியும். அதுபோலத்தான் நிறைய போர் கூட இருந்து கொண்டே துரோகமும் செய்து இருக்கிறார்கள் என்றார்.
காதல் திருமணம் தான்: இதையடுத்து கவின் திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த லாஸ்லியா, அவர் நல்ல படத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதே போல தனிப்பட்ட வாழ்க்கையிலும் நல்ல முடிவு எடுத்து திருமணம் செய்து இருக்கிறார். இரண்டுமே அவருக்கு நன்றாக போய் கொண்டு இருக்கிறது இதை நினைத்து நான் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து பேசிய லாஸ்லியா எனக்கு காதல் மீது நம்பிக்கை இருக்கிறது. இதனால், தனக்கு காதல் திருமணம் தான் நடைபெறும் என்றார்.


Click it and Unblock the Notifications











