முதல் முறையாக கோவப்பட்ட ஆஜித்... ரணகளமாகும் பிக் பாஸ் ஹவுஸ்!

சென்னை : என்னதான் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் சுரேஷ் சக்கரவர்த்தியை பல்வேறு விதமாக கூறினாலும் சுரேஷ் இல்லையென்றால் பிக் பாஸ் பார்க்கவே போரடிக்கும் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

இந்த அளவிற்கு ஒவ்வொரு எபிசோடுக்கும் சுவாரஸ்யத்தை கூட்டி சூடுபிடிக்க வைக்கிறார்.

அந்தவகையில் நேற்று விளையாடப்பட்ட எவிக்ஷன் ப்ரி பாஸ்க்கான போட்டியில் சுரேஷ் பயன்படுத்திய தந்திரம் அனைவரையும் வியக்க வைத்த நிலையில் இதுவரை கோபமே படாத ஆஜித்தையும் கோவப்பட வைத்துள்ளது.

டிஆர்பி சக்கரவர்த்தியாக

டிஆர்பி சக்கரவர்த்தியாக

பிக் பாஸ் ஆரம்பித்து ஒவ்வொருவரையாக ட்ரிக்கர் செய்து காலி செய்து வரும் சுரேஷ் சக்கரவர்த்தி பிக் பாஸ் சீசன் 4ன் டிஆர்பி சக்கரவர்த்தியாக இருந்து வருகிறார்.

வனிதா விஜயக்குமார்

வனிதா விஜயக்குமார்

போன சீசனில் வனிதா விஜயக்குமார் எவ்வாறோ அதேபோன்று இந்த சீசனில் சுரேஷ் சக்கரவர்த்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே சுவாரசியம் கூட்டியதோடு ஹவுஸ் மேட்களையும் வெளுத்து வாங்கி வருகிறார்.

சுதாரித்துக்கொண்ட ரம்யா

சுதாரித்துக்கொண்ட ரம்யா

தனது தந்திரமான விளையாட்டின் மூலம் அனைவரையும் கலங்க வைத்து வரும் சுரேஷ் நேற்று நடந்த எவிக்ஷன் ப்ரி பாஸ் போட்டியில் எவிக்ஷன் லிஸ்டில் இல்லாதபோதும் அந்த விளையாட்டில் கலந்து கொண்டு தந்திரமாக மாற்ற ஹவுஸ் மேட்ஸ்களை ஒவ்வொருவராக அதிலிருந்து வெளியே அனுப்ப இறுதியில் கேப்ரில்லா, ரம்யா பாண்டியன், ஆஜித் மட்டும் இருக்க அதில் கேப்ரில்லாவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெளியேற, கேப்ரில்லா எழுப்பிய கேள்விகள் ரம்யா மற்றும் ஆஜித்திற்கு சந்தேகத்தை எழுப்பிய நிலையில் கடைசியாக சுதாரித்துக்கொண்ட ரம்யா சுரேஷை கேள்விகளால் துளைத்தெடுத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்,

சுரேஷ் மீது கோபப்பட்டுள்ளது

சுரேஷ் மீது கோபப்பட்டுள்ளது

பிக் பாஸ் தொடங்கிய நாளில் இருந்து பலரும் பலவிதமான தருணங்களில் தங்களது கோபங்களை வெளிப்படுத்திய நிலையில் ஆஜித் மட்டும் அனைவரிடத்திலும் சகஜமாக பழகி வந்த நிலையில் இப்போது திடீரென சுரேஷ் மீது கோபப்பட்டுள்ளது ஹவுஸ்மேட்ஸ் மட்டுமல்லாமல் ரசிகர்களிடமும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடுப்பான ஆஜித்

கடுப்பான ஆஜித்

ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் சமையலறையில் தீயாக வேலை செய்து கொண்டிருக்க அங்கு வந்த ஆஜித்தை சுரேஷ் வழக்கம் போல் தேவையில்லாமல் நோண்ட கடுப்பான ஆஜித் முதல்முறையாக சுரேஷ் மீது கோபித்துக்கொண்டு கோபமாக வெளியேறியவுடன் அதைப் பார்த்த அனைவரும் ஆஜித் முதல் முறையாக கோபப்பட்டு பேசியது அனைவரிடத்திலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

பத்திரமாக பார்த்துக் கொள்வார்

பத்திரமாக பார்த்துக் கொள்வார்

மேலும் எவிக்ஷன் ப்ரி பாஸை ஆஜித் இறுதியாக பெற அதை மற்றவர்கள் திருடாமல் எப்படி பத்திரமாக பார்த்துக் கொள்வார் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X