முதல் வாரத்திலேயே நாமினேட் செய்யப்பட்ட சனம் ஷெட்டி.. சீக்கிரம் மூட்ட முடிச்ச கட்டுங்க !

சென்னை : தமிழ் பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிக போட்டியாளர்களால் எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டவர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.

Recommended Video

Bigg Boss Tamil Season 4 • Day 8 | Promo

வெற்றிகரமாக முதல் வாரம் முடிவடைந்த நிலையில் எவிக்ஷன் ப்ராசாஸ் தடபுடலாக நடந்து வருகிறது.

சுரேஷ் சக்கரவர்த்தி முதல் வாரமே எவிக்ட் ஆவார் என பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இந்த வாரத்தின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டு விளையாட்டையே டோட்டலாக மாற்றியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலராலும் சமீப வாரமாக அதிகமாக பேசப்பட்டு வருவது அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி தான்.

சுவாரசியம் அனைவரிடத்திலும்

சுவாரசியம் அனைவரிடத்திலும்

திரையில் கண்டு ரசித்த பல திரைப்பிரபலங்கள் இந்த சீசனில் அதிரடியாக களம் இறங்கியுள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார் என்று சுவாரசியம் அனைவரிடத்திலும் தொற்றிக் கொண்டுள்ளது.

நான் நானாகவே

நான் நானாகவே

இந்நிலையில் பலரும் பல வகையான விதங்களில் தங்களுக்கான நற்பெயரை மக்கள் மத்தியில் பெற பல்வேறு திட்டங்களைத் தீட்டி வரும் நிலையில் அதில் ஒரு சிலர் நான் நானாகவே இருக்கப் போகிறேன் என இயல்பாக இருந்து வருகின்றனர்.

முன்னிலையில் உள்ளனர்

முன்னிலையில் உள்ளனர்

இதுவரை பிக்பாஸ் வீட்டில் நடந்த சண்டைகளிலேயே அதிக போட்டியாளர்களுடன் சண்டை போட்டவர் என்ற வகையில் சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி முன்னிலையில் உள்ளனர்.

அதிக வாக்குகள் வித்தியாசத்தில்

அதிக வாக்குகள் வித்தியாசத்தில்

இந்நிலையில் பெரும்பான்மையான சக போட்டியாளர்கள் இவர்கள் இருவரையும் முதலில் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என காத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஜாக்பாட் அடித்தது போல சுரேஷ் இந்த வாரத்தின் கேப்டனாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த வார எவிக்ஷனிலிருந்து தப்பித்துவிட்டார்.

அனைவரிடத்திலும் முரண்

அனைவரிடத்திலும் முரண்

பிக்பாஸில் நடக்கும் பல குழப்பங்களுக்கு சண்டைகளுக்கும் மிக முக்கியமான காரணமாக இருக்கும் சனம் ஷெட்டி அனைவரிடத்திலும் முரணாக நடந்து கொள்ள இப்பொழுது அவர் தான் அனைவரின் டார்கெட்டாக மாறி உள்ளார்.

எவிக்ஷன் ப்ராசஸ்

எவிக்ஷன் ப்ராசஸ்

பிக்பாஸ் முதல் வாரம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் இரண்டாம் வாரத்தில் எவிக்ஷன் ப்ராசஸ் நடைபெற அதில் பலரும் சனம் ஷெட்டிக்கு எதிராக எவிக்ஷன் ப்ராசஸில் நாமினேட் செய்தனர்.

சனம் ஷெட்டி முன்னிலையில்

சனம் ஷெட்டி முன்னிலையில்

ஷிவானி, சனம் ஷெட்டி, ரேகா, ஆஜித் என பலரையும் சக போட்டியாளர்கள் நாமினேட் செய்த நிலையில் அதில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் ஷிவானி மற்றும் சனம் ஷெட்டி முன்னிலையில் உள்ளனர்.

பெருமையை பெற்றுள்ளார்

பெருமையை பெற்றுள்ளார்

இதிலிருந்து இவர்கள் இருவரில் யார் முதலில் வெளியில் செல்வார்கள் என பலருக்கும் வெளிப்படையாக தெரிந்த நிலையில் தமிழ் பிக்பாஸ் தொடங்கியதிலிருந்து எவிக்ஷன் ப்ராசஸில் 11 வாக்குகளுடன் சனம் ஷெட்டி அதிக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X