இவங்க..பிக்பாஸ் சீசன் 4 ஜூலியா.. அனிதாவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ் !

சென்னை : பிக் பாஸ் சீசன் 4 தொடங்கி ஓரிரு நாட்களிலேயே ஒரு சிலருக்கு முட்டிக்கொள்ள இப்பொழுது விளையாட்டு மேலும் சூடுபிடித்துள்ளது.

Recommended Video

Anitha Sampathன் Strategy நல்ல பண்றீங்க மா | Suresh | Anitha

போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையைப் பற்றி மற்ற போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என சொன்னதையடுத்து பல சென்டிமெண்ட் காட்சிகள் நடந்தேறின.

இதற்கிடையிலும் அனிதா விடாப்பிடியாக சுரேஷை தொடர்ந்து சீண்டி வருவது பிக்பாஸ் ரசிகர்களை காண்டாக்கியதோடு பிக் பாஸ் சீசன் 4ன் ஜூலியா இல்ல அனிதாவா என கலாய்த்து வருகின்றனர்.

அந்த வார்த்தையை

அந்த வார்த்தையை

பிக்பாஸ் என்னதான் புது புது டாஸ்க்குகளை போட்டியாளர்களுக்கு கொடுத்தாலும் அனிதா மட்டும் இன்னும் சுரேஷ் சொன்ன அந்த வார்த்தையை மட்டுமே வைத்துக்கொண்டு சீன் போட்டு வருகிறார்.

செய்தி வாசித்து காட்டி

செய்தி வாசித்து காட்டி

பிக்பாஸ் தொடங்கிய இரண்டாம் நாள் மாலை நேரத்தில் எதர்ச்சியாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது அனிதா சுரேஷை மையமாக வைத்து செய்திவாசிப்பது போல வாசித்துக்காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

தன்னைப்பற்றி செய்தி

தன்னைப்பற்றி செய்தி

இதை பார்த்து அருகில் உள்ள மற்ற போட்டியாளர்களும் அனிதாவை கைத்தட்டி பாராட்டிய நிலையில் சுரேஷும் தன்னைப்பற்றி செய்தி வாசிப்பது போல வாசித்து காட்டிய அனிதாவை பாராட்டி கூறியிருந்தார்.

தாம் தூம் என குதித்து

தாம் தூம் என குதித்து

இதற்கிடையில் சுரேஷ் அனிதாவை பார்த்து செய்தியாளர்கள் வணக்கம் சொல்லும்போது எச்சில் தெறிக்கும் என்ற வார்த்தையே சொல்ல அதனால் மனமுடைந்த அனிதா எந்த பிரச்சினை வந்தாலும் இதை முதலில் கையில் எடுத்துக் கொண்டு தாம் தூம் என குதித்து வருகிறார்.

டாஸ்க்கை கொடுத்த

டாஸ்க்கை கொடுத்த

இந்நிலையில் பிக்பாஸ் அனைத்து போட்டியாளர்களும் தங்களது சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற டாஸ்க்கை கொடுத்த நிலையில் அறந்தாங்கி நிஷா, சனம் ஷெட்டி, வேல்முருகன் உள்ளிட்டவர்களை தொடர்ந்து நேற்று ரியோ, கேப்ரில்லா ஆகியோர் தங்களது வாழ்க்கையில் நடந்த விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டனர்.

சலிப்பை ஏற்படுத்தியதோடு

சலிப்பை ஏற்படுத்தியதோடு

இதற்கிடையில் சமையலறையில் அடிக்கடி முட்டிக்கொள்ளும் சுரேஷ் அனிதா, நேற்று நடந்த எபிசோடில் காரம் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அனிதா, சுரேஷ் தெரியாமல் சொன்ன அந்த வார்த்தையை மட்டும் விடாப்பிடியாக பிடித்துக்கொண்டு அவரை மரியாதை குறைவாக பேசி வருவது பிக்பாஸ் ரசிகர்களிடையே சலிப்பை ஏற்படுத்தியதோடு ‘இவங்க பிக்பாஸ் சீசன் 4 ஜூலியா என அனிதாவை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X