களைகட்டும் பிக்பாஸ்.. சிவானியை டார்கெட் செய்யும் ஹவுஸ் மேட்ஸ்.. கண்கலங்கிய ரசிகர்கள்!

சென்னை : பிக் பாஸ் ஆரம்பித்த முதல் நாளே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அனைத்து ஹவுஸ் மேட்ஸும் சிவானியை டார்கெட் செய்து வருகின்றனர்.

Recommended Video

ஆட்டம் ஆரம்பம் Housemates Targeted Shivani • Promo 2

இதற்கு முன்னால் நடந்த சீசன்களில் முதல் நாள் சிறிய டாஸ்க் மட்டுமே போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலையில் இந்த முறை முதல் நாளே கேப்டன்ஷிப், பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என அதிரடி காட்டியுள்ளார் பிக் பாஸ்.

இந்நிலையில் பெரும்பான்மையான ஹவுஸ் மேட்ஸ் ஒன்றாக இணைந்து செயல்படுவது போல சிவானியை டார்கெட் செய்துள்ளது அவரது ரசிகர்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிக்பாஸ் டாஸ்க்

பிக்பாஸ் டாஸ்க்

எப்பொழுதும் இல்லாதது அளவிற்கு இந்த வருடம் மிக பிரமாண்டமான முறையில் பல்வேறு பாதுகாப்புகளுடன் தொடங்கப்பட்டு இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியமான பல போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில் ஆரம்பித்த முதல் நாளே பிக்பாஸ் டாஸ்க் பலரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிரடி காட்டியுள்ளார்

அதிரடி காட்டியுள்ளார்

கேப்டன்ஷிப் பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என தனது ஆட்டத்தை முதல் நாளே தொடங்கியுள்ளார் பிக் பாஸ். முதலில் பந்துகளை வைத்து கேப்டன்ஷிப் தேர்ந்தெடுக்கும் போட்டியில், யாரிடம் பந்து இல்லையோ அவரை அந்த வாரத்தின் கேப்டனாக நியமித்து பிக்பாஸ் அதிரடி காட்டியுள்ளார்.

கேப்டனாக முடிசூட

கேப்டனாக முடிசூட

அந்த வகையில் போட்டியாளர்கள் அனைவரின் கையிலும் பந்து இருக்க ரம்யா பாண்டியன் கையில் மட்டும் பந்து கிடைக்காமல் போக பலரும் எதிர்பாராத நிலையில் பிக்பாஸ் அவரை அந்த வாரத்தின் கேப்டனாக முடிசூட வைத்துள்ளார்.

பிடிக்காதவர்கள் லிஸ்டில்

பிடிக்காதவர்கள் லிஸ்டில்

இந்நிலையில் போட்டியாளர்களுக்கு பிடித்த இருவர்கள் பிடிக்காத இருவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கடினமான டாஸ்க்கை முதல் நாளே பிக்பாஸ் கொடுத்ததை அடுத்து பலரும் அதில் பிடிக்காதவர்கள் லிஸ்டில் ரேகா மற்றும் சிவானியை தேர்ந்தெடுத்து இருந்தனர்.

ரசிகர்கள் கொதித்தனர்

ரசிகர்கள் கொதித்தனர்

ரேகாவை காட்டிலும் சிவானி, அதிகமான உடைந்த இதயத்தை பெற்றதை பார்த்த அவரது ரசிகர்கள் கொதித்துப் போயுள்ளனர். மேலும், சிவானியை வேண்டுமென்றே டார்கெட் செய்வது அப்பட்டமாக தெரிய கடைசியாக வந்த கேப்ரில்லா சிவானிக்கு உற்சாகமூட்டும் வகையில் இதயத்தைக் கொடுத்ததோடு நான் உங்களுடன் பழக தயாராக உள்ளேன் அதற்காகவே இந்த இதயத்தை முன்பரிசாக கொடுக்கிறேன் என கூறியது ரசிகர்கள் பலரையும் பாராட்ட வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X