பிக் பாஸ் 10வது நாள் : அழவைத்த தாமரை... நீ தான் ஜெயிக்கனும்னு சொன்ன சக போட்டியாளர்… ஒரு ரவுண்டப் !

சென்னை : பிக் பாஸ் 5ல் தற்போது இரண்டாவது வாரத்திலும் போட்டியாளர்கள் அவர்களது வாழ்க்கையில் எதிர்கொண்ட விஷயங்களை கூறி வருகிறார்கள்.

Recommended Video

4 மாதம் மகனை பார்க்கவில்லை கண் கலங்கிய Thamarai Selvi | Bigg Boss 5 Tamil

கடந்த வாரம் பாதி போட்டியாளர்கள் மட்டுமே கதையை சொல்லி இருந்த நிலையில் மீதி போட்டியாளர்கள் இந்த வாரம் கதையை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

பிக் பாஸ் வீட்டின் 10வது நாளான நேற்று என்னென்ன நடந்துச்சுனு ஒரு குட்டி ரவுண்டப் பார்க்கலாம்.

ரௌடி பேபி பாட்டுடன்

ரௌடி பேபி பாட்டுடன்

போடுடா பாட்ட... ஆடுடா ஆட்டத்தை என்பது போல பிக் பாஸ் வீட்டில் காலையிலே ரௌடி பேபி பாட்டை போட்டு இழுத்துப் போர்த்தி தூங்கியவர்களும் எழுந்து செமயா ஆட்டம் போட்டனர். அதுவும் அந்த ஐக்கி பெர்ரி இருக்காங்களே அட அட என்ன டான்சுடா சாமினு சொல்ல வெச்சிட்டாங்க.

இசைவாணிக்கு அட்வைஸ்

இசைவாணிக்கு அட்வைஸ்

இதையடுத்து, அபிஷேக் இசைவாணிக்கு சில பல அட்வைஸ்களை கொடுக்கிறார். இந்த வீட்டில் யாரும் நமக்கு சொந்தம் இல்லை, இருக்குற வரைக்கும் இந்த வீட்டில் நீ சந்தோஷமா இருக்க, என்ன பண்ணணுமோ அதை நீ செய்தாக வேண்டும். அதனால... நாம ஜாலியா இருப்போம் என்பது போல நீ ஜாலியா இரு என்று இசைவாணிக்கு ஃப்ரீ அட்வைஸ் கொடுக்கிறார் அபிஷேக்.

அபிஷேக் கதை

அபிஷேக் கதை

காலை 11.45 மணிக்கு அபிஷேக் தனது வாழ்க்கையில் தான் கடந்து வந்த பாதை குறித்து பேசினார். எனக்கு எல்லாமே என் அப்பா தான்... காலையில் நாங்க எழுவதற்கு முன்னாடியே எழுந்து போய்விடுவார் ... நைட் நாங்க தூங்கிய பிறகு தான் வருவார். எங்க அப்பா யார் உதவி கேட்டாலும் செய்வார் அவர் சம்பாதித்ததே உதவி செய்வதற்காகத்தான். நாங்க இருந்த வீட்டை அடமானம் வெச்சி எங்க வீட்டு டிரைவருக்கு எங்க அப்பா உதவி செய்தார். அந்த டிரைவர் திடீர்னு இறந்துவிட்டதால், ராஜா மாதிரி வாழ்ந்த குடும்பம் திடீர்னு ஒரு நாள் ரோட்டுக்கு வந்துவிட்டோம்.

வீட்டை மீட்டேன்

வீட்டை மீட்டேன்

இதனால் என் அப்பா மன வருத்தத்தில் இருந்தார் திடீரென இறந்துவிட்டார். என்ன பண்றதுனு தெரியாம யோசித்தேன். அப்பா கட்டிய வீடு கைவிட்டு போனது. அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லிலும் என்னுடைய அப்பாவின் ரத்தம், எவனையும் ஏமாற்றி சம்பாதிக்கவில்லை. இரண்டு வருடம் கஷ்டப்பட்டு சம்பாதித்து அந்த வீட்டை மீட்டேன் என்று மிகவும் உருக்கமாக கூறினார்.

தாமரையின் கதை

தாமரையின் கதை

இதையடுத்து , பேசிய தாமரைச்செல்வி என் குடும்பத்தில் வறுமை இருந்ததால் நான் சிறுவயதிலேயே நாடகத்தில் நடிக்க போய் விட்டேன். அந்த சம்பளத்தை வச்சித்தான் என் குடும்பமே சாப்டுச்சி. அப்போ ஒருவர் என்கிட்ட அன்பா பேசினாரு, என்னையும் என் மகனையும் விட்டுட்டு என் பொண்டாடி போய்டானு சொன்னாரு. என்னை கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்டாரு, நானும் அதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அங்கு போன பிறகுதான் தெரிது எல்லாமே பொய்னு. அந்த குழந்தையையும் நான் வளர்த்தேன், எனக்கும் ஒரு பையன் வந்தான் அவன் பேரு சிவராமன். என் கணவர் தினமும் குடிப்பாரு, குடிச்சிட்டு வந்து அடிப்பாரு அதனால குழந்தையை கூட்டிக்கிட்டு வீட்டைவிட்டு போய் திருப்பூரில் வேலை பார்த்தேன்.

கதறிய தாமரை

கதறிய தாமரை

என் கஷ்டத்தை பார்த்து ஒருத்தர் மீண்டும் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. என்னையும் என் பையனையும் நல்ல பார்த்துக்கிட்டாரு. என் வளர்ப்பு மகன் என் பையனை பார்க்கனும்னு சொன்னான் அதனால முதல் கணவர் வீட்டுக்குஅனுப்பி வைத்தேன் போனவன் திரும்ப வரல, நான் தேடி போனேன் ஆனால் அவன் என்கூட வரலனு சொல்லிட்டான். நான் ஏதோ தப்பு பண்ணிட்டேனு என் பையன் நினைக்கிறான். எல்லா கஷ்டமும் நான் அவனுக்காகத்தான் பட்டேன். என் பையனை பார்த்து 4 மாசம் ஆச்சு என்று கதறி அழுதார் . அவரை அக்ஷரா மற்றும் உடன் இருந்தவர்கள் தேற்றினார்கள்.

சிரிச்சிக்கிட்டே இரு

சிரிச்சிக்கிட்டே இரு

இதையடுத்து கார்டன் ஏரியாவில் பாவனியிடம் அண்ணாச்சி பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது அண்ணாச்சி உன் சிரிப்புக்கு பின்னால் நிறைய சோகம் இருக்கு அது எனக்கு தெரியுது என்றார். உனக்கு எல்லாரும் இருக்கோம் நீ சிரிச்சிக்கிட்டே இரு என்று ஆறுதல் கூறினார் அண்ணாச்சி

டிஸ்லைக்

டிஸ்லைக்

இதையடுத்து வருண் பேசினார், ஐசிரி வேலன் என் தாதா என்றார், அவர் நாடகம் போட்டு வரும் பணத்தில் தான் குடும்பமே சாப்பிடும் என்றார். இந்த நிகழ்ச்சிக்கு நான் யார் என்பதை காட்டுவதற்காகத்தான் வந்தேன் என்று கூறினார். இவர் கூறிய கதைக்கு அந்த வீட்டில் இருந்த அத்தனை பேரும் டிஸ்லைக் கொடுத்தனர்.

செம சிரிப்பு

செம சிரிப்பு

இரவு கார்டன் ஏரியாவில் ராஜுமோகன்,அபிஷேக் , பிரியங்கா, இமான் அண்ணாச்சி, நிரூப், வருண் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது, அந்த காலத்தில் சண்டை எப்படி போடுவாங்க என்று வாயில் மியூசிக் போட்டுக்கொண்டே ராஜு செய்து காட்டுகிறார். இதற்கு பிரியாங்கா,அபிஷேக் விழுந்து விழுந்து சிரிக்கிறார். கலகலப்பான சிரிப்போடு 10வது நாள் இரவு சுமூகமாக முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X