சாமி சத்தியமா.. நான் யாருக்கும் டிஸ்லைக் கொடுத்தது இல்லை… வெள்ளந்தியா பேசிய தாமரைச்செல்வி !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில் நாடகக்கலைஞர் தாமரைச்செல்வி தனக்கே உரித்தான வெகுளித்தனத்துடன் கமலின் முன்பு பேசுகிறார்.
Recommended Video
தற்போது வெளியாகி உள்ள இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்து வந்த பாதை
பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 3ந் தேதி முதல் இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கடந்த வாரம் இசைவாணி, சின்னபொண்ணு, இமான் அண்ணாச்சி, ஸ்ருதி, நமீதா மாரிமுத்து, பாவனி ரெட்டி மற்றும் ஐக்கி ஆகியோர் தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து உருக்கமாக பேசினார்.

நமீதா வெளியேற்றம்
நேற்றைய எபிசோடில் நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு, கமல் தனது வருத்தத்தை தெரிவித்தார். மேலும், நமீதா மற்றும் இசைவாணியின் கதை தன்னை மிகவும் பாதித்ததாக கூறினார்.

ஏன் டிஸ்லைக்
சின்னப்பொண்ணு கதைக்கு ஏன் டிஸ்லைக் கொடுத்தீர்கள் என்று ராஜுவிடம் கேட்டார் கமல், அதற்கு சின்னப்பொண்ணுவின் கதை புரிந்ததாகவும், ஆனால் அவர் கதையை சொன்னவிதம் பிடிக்கவில்லை என்றும் கூறினார். இந்த கதை பிடிக்காமல் போனதற்கு உங்களின் வயதும் ஒரு காரணம் என்று நாசூக்காக கூறினார்.

கண்ணீர் விட்ட அபிஷேக்
இதையடுத்து, இன்று காலை பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியானது. அதில், அபிஷோக் ராஜா, இந்த வீட்டில் பிரியங்காவைத்தான் எனக்கு அதிகம் பிடிக்கும். என் அக்காத்தான் என்னை வளர்த்தா, அக்காவை அம்மானுத்தான் சொல்லுவேன். அக்கா திருமணமாகி போனபிறகு என்னால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியல என்று தேம்பி தேம்பி அழுதுக்கொண்டே பேசினார்.

பார்த்ததே இல்லை
இதையடுத்து தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், கமல்,தாமரைச்செல்வியிடம் லைக் , டிஸ்லைக் எல்லாம் கொடுத்து உங்களுக்கு பழக்கம் வந்து விட்டதா என்கிறார். இதையடுத்து பேசும் தாமரைச் செல்வி, இந்த நிகழ்ச்சியை நான் பார்த்தது இல்லீங்க சார், நான் குழந்தையில் எப்படி எல்லாம் இருக்கனும், சிரிக்கனும் விளையாடனும், ஓடனும்னு நினைச்சோனோ அது இங்கே நடந்துச்சு சார் என்றார்.

சாமி சத்தியாமா
கொஞ்ச நேரம் நான் கோவமா இருந்தாலோ, மனசு சரி இல்லாமல் இருந்தாலோ, அண்ணாச்சி கூப்ட்டு கூப்ட்டு பேசுவார் அதனால அண்ணாச்சிக்கு லைக் என்றார். மேலும், சாமி சத்தியமா டிஸ்லைக் நான் யாருக்கும் கொடுத்தது இல்லை என்று கூறுகிறார். இதனால், கமல் உட்பட அத்தனை போட்டியாளர்களும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











