For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிக் பாஸ் 12வது நாள் : காணாமல் போனவர்கள் யார்… கொளுத்தி போட்ட பிக் பாஸ் !

  |

  சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரை எந்தவித பரபரப்பும் சண்டையும் நிகழவில்லை வீடு அமைதியாகவே உள்ளது. ஆனால் பிக் நேற்று செய்துள்ள வேலை இனியும் வீட்டை அமைதியாக வைத்து இருக்குமா என்பது சந்தேகமே.

  பிக் பாஸ் வீட்டில் முதன்முதலாக சண்டை போட்டு டி.ஆர்.பியை உயர்த்தியவர் நமீதா மாரிமுத்து தான். ஆனால் சண்டை போட்ட அடுத்த நாளே தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர்.

  சைமா விழாவில் 7 விருதுகள்.. தட்டித்தூக்கிய சூரரைப்போற்று டீம்.. குவியும் வாழ்த்துகள்!சைமா விழாவில் 7 விருதுகள்.. தட்டித்தூக்கிய சூரரைப்போற்று டீம்.. குவியும் வாழ்த்துகள்!

  பிக் பாஸ் வீட்டின் 12வது நாளான நேற்று என்ன என்ன நடந்தது என்று ஒரு குட்டி ரவுண்டப் பார்க்கலாமா..

  பிக் பாஸ் 12வது நாள்

  பிக் பாஸ் 12வது நாள்

  12வது நாளான நேற்று சிங்கார வேலத்தில் இடம் பெற்ற சொன்னபடிகேளு பாட்டுப்பாடி அனைவரையும் எழுப்பியது. இதையடுத்து பிரியங்கா நிரூப்புடன் விதியை மீறி எலிமினேஷன் குறித்து கேமிராவின் கண்ணில் படாதபடி எழுதிகாமித்தார். ஜூம் போட்டு பார்த்தும் ஒன்னும் புரியவில்லை. இந்த ரகசிய பேச்சு குறித்து கமல் நிச்சயம் கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  ராஜுவின் கதை

  ராஜுவின் கதை

  இதையடுத்து, ராஜுமோகன் கடந்து வந்த பாதை குறித்து பேசினார். அதில், குற்றாலம் பக்கத்தில் உள்ள வலசை என்ற சிறிய கிராமத்தில் பிறந்தேன். அப்பா ஒரு மதத்தைச் சேர்ந்தவர், அம்மா ஒரு மதத்தைச் சேர்ந்தவர். இதனால், எனக்கு பெயர் வைப்பதிலேயே பெரிய பிரச்சினை ஆய்டுச்சு என்றார், மேலும், என் வாழ்க்கையில பல நாள் இருட்டில் இருந்தேன்... இந்த வெளிச்சம் என் முகத்தில் பட பல நாட்கள் ஆச்சு... ஒரு பெரிய வெளிச்சத்திற்காக காத்திருந்தேன் அது இப்போது என் மீது பட்டுள்ளது என்று அழகாக பேசினார்.

  காணாமல் போனவர்கள்

  காணாமல் போனவர்கள்

  பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக செயல்பட்டு இந்த வாரம் முழுவதும் பிக் பாஸ் வீட்டை சந்தோஷமா வைத்திருந்தது ஜொலித்தவர் என்ற ஒரு போட்டியாளரையும், இந்த வீட்டில் எந்த பங்களிப்பும் அளிக்காமல் ஏனோதானேனு நடந்து கொள்பவர்களை காணாமல் போனவர்கள் என்று இரண்டு போட்டியாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கான தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது அவர் அனைவரிடத்திலும் கேட்டு முடிவை அறிவிப்பார்கள்.

  நாடகம்

  நாடகம்

  ஆயுத பூஜை பாண்டிகையை முன்னிட்டு, தாமரை தலைமையில் பிக்பாஸ் இல்லத்தில் முத்தாலம்மனும் மூப்பெரும் தேவியும் என்ற தலைப்பில் நாடகம் நடித்து காட்டப்பட்டது. இதில், சிவபெருமான் வேடத்தில் நிரூப்பும், பார்வதியாக இசைவாணியும் காட்சி அளித்தனர். இதில் பெண் இனத்தை இழிவாக பேசி,பெண் இனத்தை அழிக்க நினைக்கும் வெல்லுடையான் என்பவனை அழிக்கும் அவதாரமாக தாமரைச்செல்வி மறுபிறவி எடுத்து அழிக்கிறார்.

  சலசலப்பு

  சலசலப்பு

  நாடகம் தொடங்கிய பின் சின்னப்பொண்ணு என்னை நோஸ்கட் பண்ணமாதிரி இருந்தது என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தினார். அபிஷேக் பண்றது என் மனசுக்கு கஷ்டமா இருக்கு, நான் பாடுறேனு சொல்லி இருந்தேனே என்று கூறுகிறார். அதற்கு பிரியங்காவும் நீங்க முதலில் பாடுறது எனக்கு தெரியாது என்கிறார். இதையடுத்து பிரச்சினை சமாதானமாகிறது. ஆயுதபூஜை விழா பிக் பாஸ் இல்லத்தில் சிறப்பாக முடிந்தது.

  English summary
  Big Boss is the best running show on Vijay TV. Season 5 is currently underway. Bigg boss 12th day special roundup.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X