இந்த வாரம் யாரு எவிக்சன் … கொளுத்திப்போட்ட பிக் பாஸ்… ஷாக்கிங் ப்ரோமோ !
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.
இந்த ப்ரோமோவில் எவிக்ஷன் பிராசஸ்ஸிற்கு தேர்வான போட்டியாளர்களின் பெயர்களை பிக் பாஸ் அறிவிக்கிறார்.
என் கூடவே இருந்தியே செவ்வாழை என்பது போல பிக் பாஸ் பேட்டியாளர்களின் முகத்தில் ஈ ஆடவில்லை.

நாமினேஷன் ப்ராசஸ்
அக்டோபர் 3ந் தேதி தொடங்கி பிக் பாஸ் தற்போது 8வது நாளை எட்டி உள்ளது. இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ காலையிலேயே வெளியானது. அதில், இந்த வீட்டில் எல்லாருமே நல்லவங்கதானு நீங்க நல்லவங்க வேஷம் போடாம இருந்தீங்கனா நல்லாருக்கும் என்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராஸசை தொடங்கி வைக்கிறார் பிக் பாஸ்.

நாமினேஷன்
அக்ஷரா இசைவாணியை நாமினேட் செய்கிறார், அபிஷேக் அக்ஷராவின் பெயரை நாமினேட் செய்கிறார். அதேபோல இமான் அண்ணாச்சி அபினய் பெயரை கூறுகிறார். அபினய் இசைவாணியின் பெயரை முன் மொழிந்து இவர் யாருடனும் சரியாக ஒட்டவில்லை என்று கூறியுள்ளார்.

2வது ப்ரோமோ
தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில், இந்த பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற இந்த வார எவிக்ஷன் ப்ராசஸ்ஸிற்கு தேர்வான நபர்கள், நாடியா, நிரூப், இமான், இசைவாணி, பிரியாங்கா, அபினய், அபிஷேக், அக்ஷரா என பெயரை குறிப்பிடுகிறார் பிக் பாஸ்.

போடு போடு கொளுத்திப்போடு
பிக் பாஸ் இந்த பெயரை அறிவித்து முடித்ததும், நாடியா... கூப்புடவே இல்ல கூப்புடவே இல்லனு சொன்னதுக்கு நாமினேஷன் ரவுண்டுல வச்சி செஞ்சிடீங்களே என்று கூறுகிறார். இதையடுத்து சவுண்டு பார்ட்டி சரோஜாவாக வரும் பிரியங்கா போடு போடு கொளுத்திப்போடு என்று கத்துகிறார்..

நாம ஜாலியா இருப்போம்.
பிக் பாஸ் வீட்டில் இந்த நாமிஷேனில் தான் சண்டையே ஆரம்பம் ஆகும். யார் நம்மை நாமிஷேன் செய்தார்கள் என்று தெரியாமல் போட்டியாளர்கள் மண்டையை உடைத்துக்கொள்வார்கள். அந்த சிண்டு முடிஞ்சிவிடும் வேலையை பிக்பாஸ் சிறப்பாக செய்து முடித்துள்ளார். இனிமேல் நான் வீட்டில் இருப்பவர்களின் உண்மை முகம் தெரியும் போல, எது எப்படியோ நாம ஜாலியா இருப்போம்.


Click it and Unblock the Notifications











