பிக் பாஸ் வீட்டின் 8வது நாள்… எப்படி இருந்துச்சு ... ஒரு குட்டி ரவுண்டப் !
சென்னை : பிக் பாஸ் சீசன் ஐந்தின் 8வது நாள் மிகவும் சுவாரசியமாகவே இருந்தது. கடந்த ஒருவாரமாக போட்டியாளர்கள் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தனர். ஆனால் நேற்று வீட்டில் அனல் பறந்தது.
கேப்டனுக்கான போட்டி, நாமினேஷசன்,எவிக்ஷன் என்று நேற்று முழுவதும் வீடு அல்லோகலப்பட்டது.
8வது நாள் பிக் பாஸ் வீட்டில் என்ன நடந்தது ஒரு ரவுண்டப்.

8வது நாள்
வலிமாங்கா வலிப்...புளிமாங்கா புளிப்... என்ற பாட்டுடன் கும்மாளமாக 8வது நாள் ஆரம்பமானது. இதையடுத்து இந்த வார தலைவரை தேர்தலுக்கு போட்டி அறிவிக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் முதுகில் பெரிய பலூனை கட்டிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை மணி ஒலிக்கும் போதும் ஓடிச் சென்று, டேபிளில் இருக்கும் மரக்கோலை எடுத்து மற்றவரின் பலூனை உடைக்க வேண்டும்.

கடைசி வரையில்
கடைசி வரை யாருடைய பலூன் உடைபடாமல் இருக்கிறதோ, கடைசி வரை யார் தங்களின் பலூனை உடையாமல் வைத்து இருக்கிறார்களோ அவரே வீட்டில் இந்த வார தலைவராக தேர்வு செய்யப்படுவார். இதில் ஆரம்பத்திலேயே பெரும்பாலானவர்களின் பலூன்கள் உடைக்கப்பட்டன. நிரூப், தாமரை, சின்ன பொண்ணு, மதுமிதா, பிரியங்கா ஆகியோர் அதிக நேரம் தங்களின் பலூனை காப்பாற்றி வைத்தனர்.

சலசலப்பு
ராஜாவுக்கு ராஜா நான் தான் டாஸ்கின் போது அபினய்யின் பலூன் தானாகவே உடைத்து விளையாட்டிலிருந்து வெளியேறினார். விளையாட்டிலிருந்து வெளியேறிய பிறகும், மரக்கோலை கையில் எடுத்ததால், இமான் அண்ணாச்சி, பிரியங்கா, அக்ஷரா, அனைவரும் சண்டையிட்டனர். இதனால், வீட்டில் சலசலப்பு நிலவியது. இதையடுத்து, ஐக்கி பெர்ரி ரூலை மறுபடியும் படித்துக்காட்டினார். இதனால் சண்டை சமாதானமானது.

தாமரைச்செல்வி கேப்டன்
இறுதியில் சின்னப்பொண்ணு மற்றும் தாமரைச்செல்வி இருவரிடம் மட்டுமே பலூன் இருந்தன. மணி அடித்ததும் மரக்கோலை கையில் எடுத்த தாமரை சின்னபொண்ணுவை பின்தொடர்ந்து ஓடினார் இதையடுத்து, சின்னப்பொண்ணு தானாகவே பலூனை உடைத்துக்கொண்டார். இதையடுத்து பிக் பாஸ் வீட்டின் முதல் தலைவராக தாமரைச்செல்வி அறிவிக்கப்பட்டார்.

இசைவாணி நாமினேட்
இதையடுத்து, நாமினேஷன் ப்ராசஸ் ஆரம்பமானது இதில், ஒவ்வொருவரும் 2 நபர்கனை நாமினேட் செய்தனர். இதில் இசைவாணி 6 பேரால் நாமினேட் செய்யப்பட்டார். இதனால் அவர் அந்த வீட்டிலிருந்து முதலில் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாலு டீம்
இதையடுத்து நிரூப், அபினய், பவானி, ஸ்ருதி,ராஜு, குக்கிங் டீமிலும், நாடியா, இசைவாணி,பிரியங்கா, இமான் அண்ணாச்சி வாஷிங் டீமிலும், அக்ஷரா, வருண், சின்னப்பொண்ணு, அபிஷேக் ராஜா ஆகியோர் ஹவுஸ்கீப்பிங் டீமிலும், ஐக்கி, மதுமிதா, சிபி ஆகியோர் பாத்ரூம் கிளினிங் டீமிலும் இடம் பெற்றனர்.

சிறப்பாக இருந்தது
இதையடுத்து, தலைவர் போட்டிக்கான டாஸ்கின் போது ஏற்பட்ட சண்டை குறித்தும், நிரூப் தான் தலைவனாக வருவார் என்று எதிர்பார்த்ததாகவும் அனைவரும் அங்காங்கே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். எது எப்படியோ நேற்றைய பிக்பாஸ் வீடு சிறப்பாக இருந்தது.


Click it and Unblock the Notifications











