பிக் பாஸ் 9வது நாள் : மூன்று பேரும் ஒரு கேங்... குரூப்பிசத்தை ஆரம்பித்த பிரியங்கா… குட்டி ரவுண்டப்!

சென்னை : பிக் பாஸ் வீட்டில் 9வது நாளான நேற்று அக்ஷரா மற்றும் பிரியங்கா, சிபி ஆகியோர் கடந்து வந்த பாதை குறித்து பேசினார்கள்.

நிரூப்,அபிஷேக் மற்றும் பிரியாங்கா மூன்று பேரும் தனியாக குரூபிசத்தை தொடங்கி உள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் 9வது நாளான நேற்று என்ன நடந்துச்சுனு ஒரு குட்டி ரவுண்டப் பாக்கலாமா.

9வது நாள்

9வது நாள்

பிக் பாஸ் இல்லத்தில் 9வது நாளான நேற்று, காலை வேக் அப் பாடலாக, சின்னத்தாமரை பாடல் ஒலித்து அனைவரையும் எழுப்பியது. இதையடுத்து, ராஜூ, மேஜையில் தாளம் போட்டபடி, தண்ணீர்தொட்டி தேடிவந்த ஜெர்மன் குட்டி நீ என்று ஸ்ருதியை பார்த்து சூப்பரா பாட்டுப்பாடி அசத்தினார்.

அக்ஷரா

அக்ஷரா

ஒரு கத சொல்லட்டுமா டாஸ்கில் அக்ஷரா தனது வாழ்க்கையில் கடந்து வந்தபாதை குறித்து பேசினார். நான் சிறு வயதாக இருக்கும் போதே, என் அப்பா ஹார்ட் அட்டாக்கில் உயிரிழந்தார். என் அப்பா தான் என் முதல் ஹீரோ.... அப்பா இறந்ததற்கு அப்புறம் என் அண்ணன் தான் என்னை பார்த்துக்கொண்டார். எனக்காக என் அண்ணன் எதை வேண்டுமானாலும் செய்வான்.. அவன் தான் என் இரண்டாவது ஹீரோ. அப்பா இறக்கும் போது என் அம்மாவுக்கு 31 வயசு, அம்மாவை சொந்தக்காரர்கள் 2வது திருமணம் செய்துக்க சொன்னாங்க. ஆனால், அம்மா எனக்காக இரண்டாவது திருமணம் பண்ணிக்கல என்று கூறினார். இந்த கதைக்கு ராஜூ லைக் கொடுத்திருந்தார்

பிரியங்கா கிண்டல்

பிரியங்கா கிண்டல்

அக்ஷரா உன் மேல மதிப்பு வெச்சி இருக்கா அதுக்குத் தானே அவளுக்கு லைக்கொடுத்த என்று ராஜூவிடம் கேட்டு கலாய்த்தார் பிரியங்கா. இதற்கு அப்படி எல்லாம் இல்லை, நான் எப்படி வாழனும் ஆசைபட்டேனோ அதை அக்ஷரா சொன்னா என்று சமாளித்தார் ராஜூ.

டிஸ்லைக் கொடுத்த ராஜு

டிஸ்லைக் கொடுத்த ராஜு

இதையடுத்து பிரியங்கா தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து பேசினார். அதில், என் அப்பாவும் அம்மாவும் ரொமேன்டிக்கா, ரொம்ப அன்பா இருப்பாங்க, எங்க வீட்டில் நானும் என் தம்பி மட்டும் தான். எனக்கு 11 வயது இருக்கும் போதே என் அப்பா இறந்துவிட்டார். அம்மா தான் எங்களை கஷ்டமே தெரியாமல் வளர்த்தாங்க என்றார். பிரியங்காவின் கதைக்கு டிஸ்லைக் கொடுத்த ராஜூ, கதையில் குறிக்கோள் இல்லை என்றார். இதை பார்த்த மற்றவர்களும் டிஸ்லைக் கொடுத்தனர்.

எல்லாரையும் நம்புங்க

எல்லாரையும் நம்புங்க

இதையடுத்து, பேசிய சிபி, என் அப்பா மாதிரி ஒரு அப்பா யாருக்கும் கிடைக்க மாட்டாங்க. நான் என்ன செய்யனும்னு நினைக்கிறேனோ அதை அப்பா செய்டானு சொல்லுவாரு. சினிமாவில் நடிக்கனும்னு சொன்னேன் உடனே செய்டானு சொன்னாரு அது தான் என் அப்பா... இன்று இந்த இடத்திற்கு வருவதற்கும் அவர் தான் காரணம் என்றார். எல்லாரையும் நம்புங்க... நம்பினால் தான் ஜெயிக்க முடியும் என்றார்.

மன்னிச்சிக்கோ

மன்னிச்சிக்கோ

அக்ஷரா தாமரைச்செல்வியிடம் நீங்க என் கலரை பார்த்து சொன்னது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சிகா அதான் நான் உங்கவிட்ட சரியா பேசவில்லை என்றார். அதற்கு பாப்பா அப்படி எல்லாம் நான் கலரை பற்றி எதுவும் சொல்லல நான் கருப்பு என்னை எல்லாம் கருப்புனு கூப்பிடுவாங்கப்பா, தப்பா இருந்த மன்னிச்சிக்கோ என்றார் தாமரை. இதையடுத்து நேற்றைய எபிசோடு எந்த பிரச்சினையும் இல்லாமல் முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X