ச்சே… லைட்டை எட்டி உதைத்து… கோவத்துடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அபிநய்!
சென்னை : பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் அபிநய் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் மற்றும் அபிநய் கேப்டனாக இருந்த வாரத்தை தவிர்த்து மற்ற அனைத்து வாரங்களிலும் தவறாமல் அபிநய் நாமினேட் ஆகிவிடுவார். எவிக்ஷ்ன் வரை சென்று பின், மீண்டு விடுவார் அபிநய்.
மேலும் பிக் பாஸ் வீட்டில் அதிகம் பேசுபொருளாக இருந்ததும் அபிநய் தான்.

சலுகை இருக்குமோ
கடந்த வாரத்தில் அபிநய் வெளியே செல்வார் என்று ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அவர் பாதுகாக்கப்பட்டு அவருக்கு பதிலாக இமான் அண்ணாச்சி வெளியேற்றப்பட்டார். இதனால் ரசிகர்கள் எப்படி ஒவ்வொரு வாரமும் இவர் மட்டும் வெளியேறாமல் தப்பிக்கிறார் என்ற குழப்பமே இருந்தது. ஒருவேளை பெரிய இடத்து பிள்ளை என்பதால் ஏதாவது சலுகை இருக்குமோ என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

வெறித்தனமாக விளையாட்டு
இதனால் இந்த வாரம் நாமினேஷனிலிருந்து தப்பிக்க நடைபெற்ற அனைத்து டாஸ்கிலும் தன்னுடைய முழு திறமையையையும் காட்டி பட்டையை கிளப்பி வெறித்தனமாக விளையாடி இருந்தார். இதனால் ரசிகர்கள் அபிநய் இந்த வாரமும் பாதுகாக்கப்படுவார் என்று நம்பி இருந்தார்.

அபிநய் எலிமினேட்
ஆனால், இன்று கமல் ஹாசன் நாமினேட் செய்யப்பட்டவர்களை ஒவ்வொருவராக சேஃப் செய்தார். இறுதியாக வருண் மற்றும் அபிநய் இருந்தனர். இதில், அபிநய் பெயரின் கார்டை காட்டி அவர் வெளியேற்றப்படுவதாக கமல் ஹாசன் அறிவித்தார்.

ஆறுதல் கூட சொல்லல
இதையடுத்து, வீட்டுக்குள் சென்ற அபிநய் ஒவ்வொருவரிடமும் நன்றி கூறிவிட்டு நல்ல விளையாடுங்க என்றார். ஆனால்,பாவனி அவருக்கு ஆறுதல் கூட சொல்ல வராமல், தொலைவில் இருந்தபடியே சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு அனைவரையும் வெடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்.

கோபத்தில் அபிநய்
இதையடுத்து, அபிநய், பாவனியிடம் நல்ல விளையாடு என்று ஒரே வார்த்தை கூறிவிட்டு வெளியே வந்தார். அப்போது கார்டன் ஏரியாவில் புல்தரையில் பொருத்தப்பட்டு இருந்த அலங்கார மின் விளக்கை கோபத்தில் காலால் எட்டி உதைத்துவிட்டு வெளியேறினார். நிச்சயமாக அபிநய்க்கு பாவனி மேல் கோபம் இருக்கத்தான் செய்யும். அபிநய்யின் மொத்த இமேஜும் டேமேஜ் ஆக பாவனி காரணமாக ஆவிட்டார் என்பது மறுக்கமுடியாத உண்மை.


Click it and Unblock the Notifications











